இயக்குநர் சேகர் கம்முலாவை சந்தித்தார் நடிகர் தனுஷ்

தனது அடுத்த படத்தின் இயக்குநர் சேகர் கம்முலாவை நடிகர் தனுஷ், ஐதராபாத்தில் இன்று சந்தித்தார். தெலுங்கில் ஹேப்பி டேஸ், ஃபிடா, லீடர் உட்பட சில படங்களை இயக்கியவர் சேகர் கம்முலா. முதல் படத்திலேயே தேசிய…

னது அடுத்த படத்தின் இயக்குநர் சேகர் கம்முலாவை நடிகர் தனுஷ், ஐதராபாத்தில் இன்று சந்தித்தார்.

தெலுங்கில் ஹேப்பி டேஸ், ஃபிடா, லீடர் உட்பட சில படங்களை இயக்கியவர் சேகர் கம்முலா. முதல் படத்திலேயே தேசிய விருது பெற்ற இயக்குநரான இவர், அடுத்து இயக்கும் படத்தில் தனுஷ் நடிக்கிறார். பிரம்மாண்டமாக உருவாக இருக்கும் இந்தப் படம் தமிழ், தெலுங்கு, இந்தி என பான் இந்தியா படமாக உருவாகிறது. நாராயண தாஸ் நரங் மற்றும் புஷ்கர் ராம்மோகன் ராவ் இந்தப் படத்தை பிரமாண்டமாகத் தயாரிக்கின்றனர்.

படத்தில் பணிபுரியும் தொழில்நுட்ப கலைஞர்கள், நடிகர், நடிகைகள் குறித்த அறிவிப்பை விரைவில் படக்குழு வெளியிட இருக்கிறது. இந்த ஆண்டு இறுதிக்குள் படப்பிடிப்பை தொடங்க படக்குழு திட்டமிட்டுள்ளது.

இதற்கிடையே, ருஸ்ஸோ சகோதரர்கள் இயக்கத்தில் உருவாகும் ‘தி க்ரே மேன்’படத்தில் நடிப்பதற்காக அமெரிக்கா சென்றிருந்த நடிகர் தனுஷ், தற்போது இந்தியா திரும்பியுள்ளார். கார்த்திக் நரேன் இயக்கத்தில் அவர் நடிக்கும் படத்தின் ஷூட்டிங் ஐதராபாத்தில் நடந்து வருகிறது. இதில் கலந்துகொண்டிருக்கும் நடிகர் தனுஷை, இயக்குநர் சேகர் கம்முலா மற்றும் தயாரிப்பாளர்கள் சந்தித்தனர். இவர்கள் சந்தித்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.

ஸ்கிரிப்டை இன்னும் சில நாட்களில் முழுமையாக முடிக்க இருக்கும் சேகர் கம்முலா, அதன்பிறகு முழு கதையையும் தனுஷூக்கு சொல்ல இருக்கிறாராம்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.