பதக்கங்களை கங்கை நதியில் வீசப் போவதாக மல்யுத்த வீரர்கள் அறிவித்ததை, பிரதமர் நரேந்திர மோடிக்கும், டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கும் டேக் செய்து சீனு ராமசாமி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
கடந்த மே 28-ம் தேதி புதிய நாடாளுமன்றம் நோக்கி பேரணியாக சென்ற மல்யுத்த வீரர், வீராங்கனைகளை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர்கள் விடுவிக்கப்பட்டனர். இதன் தொடர்ச்சியாக பிரிஜ் பூஷண் சரண் சிங் மீது 5 நாட்களுக்குள் நடவடிக்கை எடுக்காவிட்டால், பதக்கங்களை கங்கை நதியில் வீசுவோம் என்று மத்திய அரசுக்கு வீராங்கனைகள் எச்சரிக்கை விடுத்தனர்.
2016-ல் ரியோ ஒலிம்பிக்ஸ் போட்டியில் வென்ற வெண்கலப் பத்தக்கத்தை வென்ற சாக்ஷி மாலிக்கும், டோக்கியோவில் 2020-ல் பதக்கம் வென்ற பஜ்ரங் புனியாவும், உலக சாம்பியன் பட்டம் வென்ற வினேஷ் போகத்தும் தங்களது பதக்கங்களை கங்கை நதியில் தூக்கி வீசப் போவதாகத் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து மல்யுத்த வீராங்கனைகள் அளித்த பேட்டியில், “இந்தப் பதக்கங்கள் தான் எங்களின் வாழ்க்கை. இதை நாங்கள் கங்கை நதியில் வீசிய பின்னர் வாழ்வதற்கான அர்த்தமே இருக்காது. அதனால், இந்தியா கேட் முன்பு சாகும் வரை உண்ணாவிரதம் இருப்போம்” என்று கூறியுள்ளனர்.
"These medals are our lives, our souls. There would be no reason to live after throwing them in the Ganga today. So, we will stage a hunger strike until death at India Gate after that," @SakshiMalik
🙏 @PMOIndia @CMODelhi#WrestlerProtests pic.twitter.com/UjpJb2e767
— Seenu Ramasamy (@seenuramasamy) May 31, 2023
இந்த பதிவை இயக்குனர் சீனு ராமசாமி தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துகொண்டு, பிரதமர் நரேந்திர மோடியையும், டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலயும் டேக் செய்துள்ளார்.







