+1 தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில் தேர்ச்சி விகிதத்தில் பின்தங்கிய மாவட்டங்களின் பட்டியல் குறித்து பார்க்கலாம்.
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் மார்ச் 13 முதல் ஏப். 5-ம் தேதி வரை நடைபெற்ற 11ம் வகுப்பு பொதுத்தேர்வை 7 லட்சத்து 70 ஆயிரம் மாணவர்கள் எழுதினர். இவர்களில் மாணவிகள் 4,15,389 பேரும் மாணவர்கள் 3,61,454 தேர்வுகள் எழுதினர்.
இத்தேர்வு முடிவுகள் சென்னை டிபிஐ வளாகத்தில் இன்று வெளியாகியுள்ளது. முன்னதாக 10-ம் வகுப்பு முடிவுகள் காலை 10 மணிக்கு வெளியானது. அதை தொடர்ந்து தற்போது பிளஸ்-1 முடிவுகள் வெளியானது.
+2 தேர்வு முடிவுகளை www.tnresults.nic.in & www.dge.tn.gov.in என்கிற இணையதள முகவரிகளில் மாணவர்கள் அறிந்து கொள்ளலாம் என அரசு தேர்வுகள் இயக்ககம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தவிர, பள்ளி மாணவர்கள் தாங்கள் படித்த பள்ளிகளிலும், செல்போன் எண்களுக்கு குறுஞ்செய்தி வழியாகவும் தேர்வு முடிவுகள் அனுப்பப்படும் என்றும் தேர்வுத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மொத்தமாக 7,06,413 (90.93%) தேர்ச்சிப் பெற்றுள்ளனர். இவர்களில் மாணவிகள் 3,91,968 (94.36%) பேரும் மாணவர்கள் : 3,14,444 (86.99%) பேரும் தேர்ச்சி அடைந்துள்ளனர். வழக்கம்போல மாணவர்களை விட மாணவியர் 7.37% அதிகம் தேர்ச்சிப்
பெற்றுள்ளனர்.
தேர்ச்சி விகிதத்தில் பின்தங்கிய மாவட்டங்கள் பட்டியல் :
– ராணிப்பேட்டை ( 82.58 %)
–மயிலாடுதுறை (83.70 % )
–திருவண்ணாமலை (84.00 %)
–விழுப்புரம் ( 84.51 % )
–நாகப்பட்டிணம் ( 85.03 % )







