இரவின் நிழல் படத்தைப் பார்த்த நடிகர் ரஜினிகாந்த், பார்த்திபன் மற்றும் படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
பார்த்திபன் இயக்கி நடித்துள்ள இறைவனிடம் திரைப்படம் திரையரங்கில் வெளியாகி
ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களைப் பெற்று வருகிறது. உலகின் முதல் நான் லீனியர் சிங்கிள் ஷாட் திரைப்படமாக இரவின் நிழல் உருவாகியுள்ளது. நான் லீனியர் என்றால் ஒரு கதை அடுத்தடுத்து ஒரே நேர்க்கோட்டில் சொல்லப்படாமல் வெவ்வேறு காலகட்டங்களில் நடப்பனவற்றை முன்னும் பின்னுமாக இணைத்துச் செல்வது. இதனை ஒரே ஷாட்டில் சொல்வது மிகவும் சவாலானாவேலை. 90 நிமிட படத்தை வெற்றிகரமாக இயக்கியிருக்கிறார் பார்த்திபன். கலை இயக்குநர் விஜய் முருகன், ஒளிப்பதிவாளர் ஆர்தர் ஏ.வில்சன் துணையோடு இந்த சாதனையை நிகழ்த்தியிருக்கிறார்.
இப்படத்தை பார்த்த நடிகர் ரஜினிகாந்த் பார்த்திபன் மற்றும் படக்குழுவினரை
பாராட்டியுள்ளார். அதில், இரவின் நிழல் படத்தை அசாத்திய முயற்சியுடன் ஒரே சாட்டில் முழுபடத்தையும் எடுத்து அனைவருடைய பாராட்டுகளையும் பெற்று உலக சாதனை படைத்திருக்கும் நண்பர் பார்த்திபன் அவர்களுக்கும், அவரது படக் குழுவினர்களுக்கும், ஏ.ஆர்.ரஹ்மான் அவர்களுக்கும், முக்கியமாக படத்தின் ஒளிப்பதிவாளர் ஆர்தர் வில்சன் அவர்களுக்கும் என் மனமார்ந்த பாராட்டுகள் எனத் தெரிவித்துள்ளார்.
-ம.பவித்ரா








