முக்கியச் செய்திகள் செய்திகள் சினிமா

இயக்குநர் அந்தோணி ஈஸ்ட்மேன் காலமானார்

பிரபல மலையாள இயக்குநரும் தயாரிப்பாளருமான அந்தோணி ஈஸ்ட்மேன் மாரடைப்பால் இன்று காலமானார். அவருக்கு வயது 75.

புகைப்படக் கலைஞராக வாழ்க்கையை தொடங்கிய அந்தோணி ’ஈஸ்ட்மேன்’ என்ற ஸ்டூடியோவை ஆரம்பித்தார். இதையடுத்து அந்தோணி ஈஸ்ட்மேன் என்று அழைக்கப்பட்டார். இணையதேடி என்ற படம் மூலம் இயக்குநராக அறிமுகமான இவர், இந்தப் படத்தில் நடிகை சில்க் ஸ்மிதாவை மலையாளத்தில் அறிமுகப்படுத்தினார்.

பிறகு ஷங்கர், மேனகா நடித்த அம்படா ஞானே, வயல், ஐஸ் கிரீம் உட்பட சில படங்களை இயக்கினார். தஸ்கர வீரன் உட்பட சில படங்களுக்கு கதைகள் எழுதிய அந்தோணி ஈஸ்ட்மேன், படங்களையும் தயாரித்துள்ளார்.

கடந்த சில நாட்களாக உடல் நிலை சரியில்லாமல் திருச்சூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டதை அடுத்து உயிரிழந்தார்.
அவர் மறைவுக்கு மலையாள திரைபிரபலங்கள், ரசிகர்கள், சமூகவலைதளங்களில் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Advertisement:
SHARE

Related posts

அயோத்தியா மண்டபம்: “தனி நீதிபதியின் உத்தரவு செல்லும்”

Janani

100 ரூபாய்க்கு பெட்ரோல் போட்டால் 50 ரூபாய்க்கான பெட்ரோல் இலவசம்!

Gayathri Venkatesan

நீர்நிலைகள் பாதுகாப்பு; 2 வாரங்களில் அறிக்கை அளிக்க நீதிமன்றம் உத்தரவு

Saravana Kumar