நியூஸ் 7 தமிழ் செய்தி எதிரொலி: 5 மாதங்களாக கிடப்பில் போடப்பட்ட சாலை போடும் பணி தொடக்கம்

நியூஸ்7 தமிழ் தொலைக்காட்சியின் செய்தி எதிரொலியாக 5 மாதங்களாக கிடப்பில் போடப்பட்ட வள்ளியூர் அருகேயுள்ள கண்டிகைபேரியில் சாலை போடும் பணி மீண்டும் தொடங்கியது. நெல்லை மாவட்டம் வள்ளியூர் – நாங்குனேரி சாலையில் ஞானதாஸ்நகரில் இருந்து…

நியூஸ்7 தமிழ் தொலைக்காட்சியின் செய்தி எதிரொலியாக 5 மாதங்களாக கிடப்பில் போடப்பட்ட வள்ளியூர் அருகேயுள்ள கண்டிகைபேரியில் சாலை போடும் பணி மீண்டும் தொடங்கியது.

நெல்லை மாவட்டம் வள்ளியூர் – நாங்குனேரி சாலையில் ஞானதாஸ்நகரில் இருந்து பிரிந்து சுமார் இரண்டு கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ள கிராமம் கண்டிகைபேரி. இந்த ஊருக்கு செல்லும் சாலை குண்டும் குழியுமாக மோசமான நிலையில் காணப்பட்டது. இந்த சாலை வழியாக கண்டிகைபேரி, நல்லான்குளம், இளையநயினார்குளம், சண்முகபுரம் உட்பட பத்துக்கும் மேற்பட்ட கிராம மக்கள் வள்ளியூருக்கு இருச்சக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் மிகவும் சிரமத்துடன் சென்று வருகின்றனர். இதுகுறித்து மாவட்ட நிர்வாகத்திற்கு பொதுமக்கள் கோரிக்கை அளித்ததன் அடிப்படையில் சாலையை புதுப்பிக்க ரூ. 80 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

குவித்து வைக்கப்பட்ட சல்லிக்கற்கள்

மேலும் இதற்கான பணிகளை அப்போதைய நாங்குனேரி எம்.எல்.ஏ ரெட்டியார்பட்டி நாராயணன் கடந்த பிப்ரவரி மாதம் தொடங்கி வைத்தார். பணிகள் மேற்கொள்வதற்காக ஒப்பந்தகாரரும் சாலையோரம் குவியல் குவியலாக சல்லிக்கற்களை குவித்து வைத்துள்ளனர். ஆனால் மாதங்கள் பல கடந்தும் சாலை போடும் பணி ஆரம்பிக்கவில்லை. இதனால் தென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில், மழை பெய்யும்போது சாலை சேறும், சகதியுமாக காட்சியளித்து.

ஜேசிபி மூலம் தொடங்கிய பணிகள்

இதுகுறித்து நியூஸ் 7 தமிழ் தொலைக்காட்சியில் நேற்று முன்தினம் செய்தி வெளியிடப்பட்டது. இதனை தொடர்ந்து இன்று சாலை போடும் பணிகளுக்காக ஜே.சி.பி மூலம் சாலையோரமுள்ள செடிகள் அகற்றப்பட்டு பணிகள் தொடங்கியது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்து செய்தி வெளியிட்ட நியூஸ் 7 தமிழ் தொலைக்காட்சிக்கு நன்றி தெரிவித்தனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.