கோடை விடுமுறையில் பம்பரம் விளையாடும் பள்ளி மாணவர்கள்!

திண்டுக்கல் மாவட்டம் கவுண்டன்பட்டு அருகேயுள்ள இந்திரா நகர் கிராமத்தில் பள்ளி கோடை விடுமுறையொட்டி மாணவர்கள் தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான பம்பரம் சுற்றி விளையாடி வருவது இருபது ஆண்டுகளுக்கு முந்தைய நினைவுகளை மீட்டு வந்தது போன்ற…

திண்டுக்கல் மாவட்டம் கவுண்டன்பட்டு அருகேயுள்ள இந்திரா நகர் கிராமத்தில் பள்ளி கோடை விடுமுறையொட்டி மாணவர்கள் தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான பம்பரம் சுற்றி விளையாடி வருவது இருபது ஆண்டுகளுக்கு முந்தைய நினைவுகளை மீட்டு வந்தது போன்ற உணர்வை ஏற்படுத்துகிறது.

காலச்சக்கரத்தின் அதிவேக சுழற்ச்சியில் உலகம் நவீனமயமாகி வருகிறது.இன்றைய காலத்தில் சிறார்கள் முதல் பெரியவர்கள் வரை தொடுதிரை அலைபேசிகளின் ஆதிக்கத்திற்கு அடிமையாகி உள்ளனர். தண்ணீர் போல அத்தியாவசிய பொருட்களில் ஒன்றாக மாறிப் போனது ஆண்ட்ராய்ட் போன்கள்.இன்றைய தலைமுறையினர் கிட்டதட்ட வெளியில் விளையாடும் விளையாட்டுகளை மறந்து விட்டனர் என்றே சொல்லலாம்.
நமது பாரம்பரிய சிறார் விளையாட்டுகளான கில்லி, பம்பரம், பல்லாங்குழி, நொண்டியாட்டம் உள்ளிட்ட ஏராளமான விளையாட்டுகளை இன்றைய தலைமுறையினர் மறந்துவிட்டனர் என்றே சொல்லலாம்.

இந்நிலையில் திண்டுக்கல் மாவட்டம் கவுண்டம்பட்டி ஊராட்சிக்குட்பட்ட இந்திரா நகர் பகுதியில் பள்ளி கோடை விடுமுறையொட்டி பம்பரம் உள்ளிட்டவைகளை விளையாடி வருகின்றனர். இது பலரை மீண்டும் தங்களின் குழந்தைகால நினைவுகளை அசைபோட வைத்துள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.