குடியிருப்பு பகுதியில் சுற்றித்திரியும் காட்டு யானையால் பொதுமக்கள் அச்சம்

பழனி அருகே குடியிருப்பு பகுதியில் சுற்றித்திரியும் ஒற்றை காட்டு யானையால், பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் அச்சம் தெரிவித்துள்ளனர். திண்டுக்கல் மாவட்டம் வரதமா நதி அணைப்பகுதி அருகே கொடைக்கானல் சாலையில் ஒற்றையானை நடமாடுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.…

பழனி அருகே குடியிருப்பு பகுதியில் சுற்றித்திரியும் ஒற்றை காட்டு யானையால், பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் அச்சம் தெரிவித்துள்ளனர்.

திண்டுக்கல் மாவட்டம் வரதமா நதி அணைப்பகுதி அருகே கொடைக்கானல் சாலையில் ஒற்றையானை நடமாடுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒற்றை யானை இரவு நேரத்தில் சாலையில் உலா வருவதால் அவ்வழியே வரும் வாகன ஓட்டிகள் மிகுந்த அச்சமடந்துள்ளனர்.

குடியிருப்பு பகுதிகளில் யானை பிளிரியபடி செல்வதால் அப்பகுதி விவசாயிகள், பொதுமக்களும் வெளியில் நடமாட அச்சம் தெரிவித்துள்ளனர். எனவே சாலை பகுதியில் சுற்றித்திரியும் அந்த ஒற்றை காட்டு யானையை விரட்ட, வனத்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.