ஆயிரக்கணக்கான மு.க.ஸ்டாலின் உருவப்படங்களை கொண்டு கருணாநிதியின் உருவத்தை தத்ரூபமாக வரைந்த ஓவிய ஆசிரியர்!

திண்டுக்கல் மாவட்டம் சத்திரப்பட்டியில் அரசு பள்ளி ஓவிய ஆசிரியர் ஒருவர் ஆயிரக்கணக்கான மு.க.ஸ்டாலின் சிறிய அளவிலான உருவப்படங்களை கொண்டு முன்னாள் முதல்வர் கருணாநிதியின் ஓவியத்தை தத்ரூபமாக வரைந்து அசத்தியுள்ளார். திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே…

திண்டுக்கல் மாவட்டம் சத்திரப்பட்டியில் அரசு பள்ளி ஓவிய ஆசிரியர் ஒருவர் ஆயிரக்கணக்கான மு.க.ஸ்டாலின் சிறிய அளவிலான உருவப்படங்களை கொண்டு முன்னாள் முதல்வர் கருணாநிதியின் ஓவியத்தை தத்ரூபமாக
வரைந்து அசத்தியுள்ளார்.

திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே சத்திரப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் பகுதி நேர ஓவிய ஆசிரியராக அன்புச்செல்வன் என்பவர் பணிபுரிந்து வருகிறார்.இவர் தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நூற்றாண்டை வித்தியாசமான முறையில் கொண்டாடும் விதமாக இரண்டாயிரம் மு.க.ஸ்டாலினின் சிறிய அளவிலான உருவப்படங்களை கொண்டு கருணாநிதியின் உருவத்தை தத்ரூபமாக வரைந்துள்ளார். மேலும் கருணாநிதியின் எழுத்தாற்றலை நினைவுகூறும் விதமாக நூற்றுக்கணக்கான பேனாக்களை கொண்டு புகழஞ்சலி செலுத்தியுள்ளார்.

இதுகுறித்து அன்புச்செல்வன் கூறியதாவது, முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நூற்றாண்டை முன்னிட்டு ஓவியமாக வரைய முடிவு செய்தோ.ஆனால் அதை சாதாரணமாக இல்லாமல் சுமார் 3அடி அகலமும், 4அடி உயரத்திலும் ஆயிரக்கணக்கான மு.க.ஸ்டாலினின் உருவப்படங்களை கொண்டு வரைந்துள்ளோம்.பகுதி நேர ஆசிரியர்கள் அனைவரையும் முழுநேர ஆசிரியர்களாக பணிநியமனம் செய்யப்படும் என திமுக தேர்தல் அறிக்கையில் கூறியுள்ளது.

அந்த வாக்குறுதியை இந்நேரத்தில் அரசு நிறைவேற்றும் என நாங்கள் நம்புகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.

ஏற்கனவே இவர் கடந்தாண்டு கருணாநிதியின் உருவப்படங்களை கொண்டு மு.க.ஸ்டாலின் உருவத்தை வரைந்தது குறிப்பிடத்தக்கது.

—-வேந்தன்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.