நீதிமன்றத்திற்குள்ளேயே குற்றவாளியை அரிவாளால் வெட்டிய ”கொக்கி குமார்” – தப்பிக்க முயன்றபோது சுட்டு பிடித்த போலீசார்!…

நீதிமன்றத்தில் பட்டா கத்தியால் வெட்டி படுகொலை செய்ய முயன்ற கொக்கி குமார் என்பவரை போலீசார் துப்பாக்கியால் சுட்டு பிடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  ராமநாதபுரம் மாவட்டம் ஆர் எஸ் மங்கலம் பகுதியைச் சேர்ந்தவர்…

நீதிமன்றத்தில் பட்டா கத்தியால் வெட்டி படுகொலை செய்ய முயன்ற கொக்கி குமார் என்பவரை போலீசார் துப்பாக்கியால் சுட்டு பிடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

ராமநாதபுரம் மாவட்டம் ஆர் எஸ் மங்கலம் பகுதியைச் சேர்ந்தவர் கொக்கி குமார்.  இவர் மீது கொலை கஞ்சா கடத்தல் உள்ளிட்ட சுமார் 15க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன.  இந்த நிலையில் கடந்த மாதம் இவரின் உறவினர் சந்துரு என்பவரை சிவஞானபுரம் பகுதியைச் சேர்ந்த அசோக்குமார், என்பவர் அருவாளில் வெட்டி படுகாயம் ஏற்படுத்தி உள்ளார்.


இதை அறிந்த கொக்கி குமார், தன்னுடைய உறவினரை அருவாளால் வெட்டிய அசோக்குமாரை பழிவாங்குவதற்காக பல்வேறு இடங்களில் தேடி வந்துள்ளார்.  இந்த நிலையில் சந்துரு வழக்கு தொடர்பாக ராமநாதபுரம் நீதிமன்றத்தில் ஆஜராக வந்த
அசோக்குமாரை, கொக்கி குமார் மறைத்து வைத்திருந்த அரிவாளால்  தலை கை,
கால் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் வெட்டி உள்ளார்.

இதனால் நீதிமன்றம் பகுதியில் பெரும் பரபரப்பையும் பதட்டத்தையும் ஏற்படுத்தியது.
அரிவாளால் வெட்டி விட்டு கொக்கி குமார் தப்பி ஓடிவிட்டார். அதன் பின்பு ராமநாதபுரம் எஸ்பி தங்கதுரை டி.எஸ்.பி ராஜா உள்ளிட்ட போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து படுகாயம் அடைந்த அசோக்குமாரை ராமநாதபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்குத் தீவிர சிகிச்சைக்குக் கொண்டு சென்றனர்.

மேலும் இது தொடர்பாகத் தனிப்படை அமைக்கப்பட்டு கொக்கி குமாரை போலீசார் தேடினர். அப்போது உச்சிப்புளி அருகே மறைந்திருந்த போது தனிப்படை போலீசார் அவரை பிடிக்க முயன்றனர். அப்போது கேணிக்கரை காவல்துறை ஆய்வாளர் ஆடிவேல் போலீசார் சுற்றி வளைத்து கொக்கி குமாரின் வலது காலில் சுட்டுப் பிடித்தனர்.

இதனைத் தொடர்ந்து கொக்கி குமாரை 108 ஆம்புலன்ஸ் மூலம் ராமநாதபுரம்
மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்குத் தீவிர சிகிச்சை பிரிவில்
சேர்க்கப்பட்டுள்ளனர். நீதிமன்றத்துக்குள் ஒருவரைப் படுகொலை செய்ய முயன்ற சம்பவத்தில் போலீசார் துப்பாக்கியால் சுட்டுப் பிடித்தது பொதுமக்கள் மத்தியில் பரபரப்பை பெற்றது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.