தமிழகத்தில் வித்தியாசமான அரசியல் சூழல் -ஆளுநர் ஆர்.என். ரவி

தமிழகத்தில் வித்தியாசமாக ஒரு அரசியல் சூழல் உள்ளது. எல்லாவற்றிற்கும் நாங்கள் திராவிடர்கள் என்று சொல்கிறார்கள் என ஆளுநர் ஆர் என் ரவி கூறியுள்ளார்.  காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சிக்கு தமிழகத்தில் இருந்து சென்று திரும்ப…

தமிழகத்தில் வித்தியாசமாக ஒரு அரசியல் சூழல் உள்ளது. எல்லாவற்றிற்கும்
நாங்கள் திராவிடர்கள் என்று சொல்கிறார்கள் என ஆளுநர் ஆர் என் ரவி கூறியுள்ளார். 

காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சிக்கு தமிழகத்தில் இருந்து சென்று திரும்ப
ஏற்பாடுகளை செய்த ஏற்பாட்டாளர்கள் மற்றும் தன்னார்வலர்களை கெளரவிக்கும்
நிகழ்ச்சி சென்னை கிண்டி ஆளுநர் மாளிகையில் உள்ள தர்பார் அரங்கத்தில்
நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்து கொண்டு காசி தமிழ்
சங்கமம் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் மற்றும் தன்னார்வலர்களை பாராட்டடினார்.
பின்னர் மேடையில் பேசிய ஆளுநர் ஆர் என் ரவி,  காசி தமிழ் சங்மகம் வெற்றி பெற காரணமாக இருந்த எல்லோருக்கும் நன்றிகள். இதை சாத்தியம் செய்ததற்கு நன்றி என கூறினார்.


மேலும், பிரதமர் மோடி பல நாட்களாக யோசித்து இந்த காசி தமிழ் சங்மகம் நிகழ்வு
நடத்தப்பட்டது, மிக குறுகிய காலத்தில் இந்த நிகழ்ச்சி நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. இதில் முழு உழைப்பு தனர்வலர்கள் தான் ஓர் தன் பணியை சரியாக செய்யாமல் இருந்திருந்தால் இந்த 1 மாதம் நிகழ்ச்சி நடந்திருக்காது. இது மக்கள் இயக்கமாக இதை கொண்டு சென்றது தான் வெற்றிக்கு காரணம், இதை தான் பிரதமர் மோடி சொல்வார். அவர் செய்த பணிகளுக்கு மக்கள் இயக்கமாக தான் இருந்து எடுத்துக்காட்டாக துய்மை இந்திய திட்டம், கழிபறை கட்டும் திட்டம், கொரோனா எதிர்ப்பு இப்படி எல்லாமே மக்கள் இயக்கமாக இருந்ததே வெற்றிக்கு காரணம் என தெரிவித்தார்.

அத்துடன், இந்த உலகத்தில் பல பிரசனைக்கு தீர்வு காணும் ஒரு நாடக இந்திய இருக்கிறது.
இந்தியாவின் வளர்ச்சி அந்த அளவுக்கு உள்ளது, போர் நிறுத்தம், வறுமை ஒழிப்பு,
பருவ நிலை மாற்றம் என்று எல்லா விதமான பிரச்சனைக்கும் தீர்வு தரும் ஒரு நாடக
இந்தியா உள்ளது என கூறினார்.


மேலும், தமிழகத்தில் வித்தியாசமாக ஒரு அரசியல் சூழல் உள்ளது. எல்லாவற்றிற்கும்
நாங்கள் திராவிடர்கள் என்று சொல்கிறார்கள், இந்தியா முழுவதும் ஒரு செயல்
திட்டம் இருந்தால் தமிழ்நாடு அதை வேண்டாம் என்று சொல்கிறது. தமிழ்நாடு
என்பதைவிட தமிழகம் என்று சொல்வதே சரியாக இருக்கும். பொய் பரப்புரையை நாம்
முறியடிக்க வேண்டும் எது உண்மை என்று மக்களுக்கு சொல்ல வேண்டும் என தெரிவித்தார்.

அத்துடன், எல்லாம் வளர்ந்த நாடுகளும் இப்போது சரிவில் உள்ளது அடுத்த 25 ஆண்டுகளில் இந்திய இந்த உலகத்தை வழி நடத்தும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை எனவும் அவர் பேசினார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.