இந்தியா-இலங்கை அணிகள் மோதும் 2வது டி20 போட்டி இன்று புனேவில் நடைபெறுகிறது.
இலங்கை அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20 போட்டிகள், 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடுகிறது. இந்தியா- இலங்கை அணிகள் இடையிலான முதலாவது டி20 போட்டி 3ம் தேதி மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் நடைபெற்றது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்திய அணியில் கேப்டன் ரோகித் சர்மா, விராட் கோலி, லோகேஷ் ராகுல் ஆகியோருக்கு ஓய்வு கொடுக்கப்பட்டுள்ள நிலையில், ஆல்-ரவுண்டர் ஹர்திக் பாண்ட்யா கேப்டனாக அணியை வழிநடத்தினார். இந்த போட்டியில் இந்தியா 2 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கை அணியை வீழ்த்தி த்ரில் வெற்றி பெற்றது. இதனால் இந்த தொடரில் இந்தியா 1-0 என்ற நிலையில் இந்தியா முன்னிலையில் உள்ளது.இந்நிலையில் இந்தியா-இலங்கை அணிகள் மோதும் இரண்டாவது டி20 போட்டி இன்று இரவு புனேவில் நடைபெறுகிறது. இந்த போட்டியில் இந்தியா அணி தொடரை வெல்லும் முனைப்பில் களமிறங்குகிறது. முதல் போட்டியில் பெற்ற தோல்விக்கு பதிலடி கொடுக்கும் விதத்தில் இலங்கை அணி களமிறங்க உள்ளது. எனவே இந்த ஆட்டம் விறுவிறுப்பாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.