மைதானத்திற்குள் புகுந்து வீரர்களை ஓடவிட்ட காளை…வைரலாகும் வீடியோ!

கிரிக்கெட் போட்டியின் போது திடீரென மைதானத்திற்குள் காளை புகுந்ததால்,  வீரர்கள் அலறியடித்து கொண்டு ஓடிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. கிரிக்கெட் போட்டிகளின் போது அடிக்கடி விலங்குகள் மைதானத்தில் புகுந்து அட்டகாசம் செய்யும்…

கிரிக்கெட் போட்டியின் போது திடீரென மைதானத்திற்குள் காளை புகுந்ததால்,  வீரர்கள் அலறியடித்து கொண்டு ஓடிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

கிரிக்கெட் போட்டிகளின் போது அடிக்கடி விலங்குகள் மைதானத்தில் புகுந்து அட்டகாசம் செய்யும் சுவாரசிய வீடியோக்கள் இணையத்தில் அவ்வப்போது வைரலாவது வழக்கம். நாய்,  பாம்பு,  பறவை என பல உயிரினங்களால் இடையூறு வந்துள்ளது.  ஆனால் தற்போது காளை ஒன்று உள்ளே புகுந்து அட்டகாசம் செய்துள்ளது.  இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

பொதுவாக இளைஞர்கள் தங்கள் சொந்த ஊர்களில் கிரிக்கெட்,  கூடைப்பந்து,  கைப்பந்து போன்ற போட்டிகள் வழக்கம். அந்த வகையில் இங்கு ஒரு கிராமத்தில் இளைஞர்கள் கிரிக்கெட் விளையாடி கொண்டிருக்கின்றனர். அப்போது, திடீரென எதிர்பாரதவிதமாக காளை மாடுகள் அந்த மைதானத்தின் உள்ளே வந்து இளைஞர்கள் துரத்த ஆரம்பித்துள்ளது. இந்த வீடியோவை முஃபதால் வோஹ்ரா என்பவர் தனது எக்ஸ் தள பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

பிப்ரவரி 19 ஆம் தேதி பகிரப்பட்ட இந்த வீடியோ 10 லட்சத்திற்கும் அதிகமான பார்வையாளர்களை கடந்து வருகிறது. இதற்கு பலரும் தங்கள் கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். அதில் சில கருத்துகளை இங்கு காண்போம்.

  • இங்கிலாந்தை விட காளை நல்ல சேசிங் திறனை கொண்டுள்ளது.
  • ஜல்லிகட்டு இடைவேளை
  • வீரர்கள் இப்பதானா களத்துல இறங்கிருக்காங்க.
  • உண்மையான விளையாட்டை இப்போது விளையாடுவோம்.

ஆனால்,  இந்த சம்பவம் எங்கு நிகழ்ந்தது என்பது குறித்த தகவல் எதுவும் குறிப்பிடப்படவில்லை…

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.