இந்தியாவில் கொரோனா தொற்று சற்று அதிகரிக்கத் தொடங்கியுள்ள நிலையில், அதுதொடர்பாக ஐசிஎம்ஆர் விளக்கம் அளித்துள்ளது.
2020ஆம் ஆண்டு மார்ச் மாதத்திலிருந்து கொரோனா தொற்று இந்தியாவில் தனது கோர தாண்டவத்தை நிகழ்த்திக் காட்டியது. எனினும், கடந்த சில மாதங்களாக குறைந்த அளவே கொரோனா தொற்று பாதிப்பு உறுதியானது. உயிரிழப்புகளின் எண்ணிக்கையும் வெகுவாக குறைந்தது. எனினும், கடந்த சில வாரங்களாக தொற்று சற்று அதிகரித்து வருகிறது.
இந்த நிலையில் ஐசிஎம்ஆர் கூடுதல் இயக்குனர் சமீரன் பாண்டா, “சில மாவட்டங்களில் மட்டுமே கொரோனா தொற்று சற்று அதிகரித்துள்ளது. நாம் பார்ப்பது தற்காலிகமே தவிர, புதிய வகையான கொரோனா தொற்றின் தொடக்கம் அல்ல. இவை நாடு முழுவதும் சீரான அளவில் பரவாது. எனினும், 4வது அலை தொடக்கத்திற்கான எந்த அறிகுறியும் இல்லை” என்று கூறினார்.

கொரோனாவால் பாதிக்கப்படுவோர் விகிதம் சில மாநிலங்களில் அதிகரிக்கும் நிலையில், “குறைந்த சோதனையே இந்த அதிகரிப்புக்கு காரணம்” என்ற சமீரன் அதற்கு உதாரணமாக டெல்லியை காட்டினார். டெல்லியில் சோதனையை அதிகரித்த உடன், பாதிப்பு சதவிகிதம் 7லிருந்து 5 ஆக குறைந்துள்ளது என்று சுட்டிக்காட்டினார்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement: