கேரளாவில் ஸ்ரீபௌணர்மி காவு பாலபத்திரா கோவிலில் வரும் 6ம் தேதி முதல் 10 நாட்களுக்கு மகா காளி யாகம் நடைபெறுகிறது.
கேரள மாநிலத்தில் புகழ் பெற்ற திருவனந்தபுரம் வெங்கனுர் ஸ்ரீ பௌணர்மி காவு பாலபத்திரா கோவில் அமைந்துள்ளது. இது மிகவும் பிரசித்தி பெற்ற கோவிலாகும். இங்கு மலையாள மொழியில் உள்ள 51 எழுத்துக்களில் ஒவ்வொரு எழுத்தையும் கடவுளாக வழிபடுவது வழக்கம்.
இங்கு வரலாற்றில் முதன் முறையாக மூதாதையர்கள் மோட்சம் பெறவும், உலக அமைதிக்காகவும் மக்கள் நோய் நொடியின்றி வாழவும்,மிக பிரமாண்ட மஹா காளி யாகம் நடத்த கோவில் நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. இந்த யாகம் வரும் 6ம் தேதி முதல் 16ம் தேதி வரை நடைபெறுகிறது.
இந்த யாகத்தில் இந்தியா முழுவதும் உள்ள 51 சக்தி பிடங்களில் இருந்து யாக குருக்கள் மற்றும் அகோரிகரிகள் பங்கேற்கின்றனர். மேலும் மலையாள மொழியில் உள்ள 51 எழுத்துகளின் முதல் எழுத்துக்களை பெயராக கொண்ட அரசியல் பிரமுகர்கள் மற்றும் கேரள ஆளுநர் உட்பட பிரபலங்கள் பங்கேற்கின்றனர்.
வரலாற்றில் முதன் முதலாக நடக்கும் யாகம் என்பதால் இந்தியா முழுவதும் இருந்து லட்ச கணக்கான பக்தர்கள் கலந்து கொள்கின்றனர். இந்த கோவிலில் ஒவ்வொரு எழுத்தையும் ஒவ்வொரு கடவுளாக பாவித்து வழிபாடு நடத்துகின்றனர்.








