அயோத்தி ராமர் கோயிலுக்கு அமெரிக்க அமைப்பு தங்க வாகனங்கள் மற்றும் சிம்மாசனங்களை பரிசளித்ததா? – உண்மை என்ன?

அயோத்தியில் உள்ள ராமர் கோவிலுக்கு அமெரிக்க அமைப்பு ஒன்று  11 தங்க வாகனங்கள் மற்றும் சிம்மாசனங்களை பரிசாக அளித்துள்ளதாக சமூக வலைதளங்களில் படங்கள், வீடியோக்கள் வைரலாகின.

This News Fact Checked by ‘Boom

அயோத்தியில் உள்ள ராமர் கோவிலுக்கு அமெரிக்க அமைப்பு ஒன்று  11 தங்க வாகனங்கள் மற்றும் சிம்மாசனங்களை பரிசாக அளித்துள்ளதாக கூறப்படும் தங்க கலைப்படைப்பின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. BOOM தனது விசாரணையில் அந்த வைரலான வீடியோ மார்ச் 2023ல் வெளியானது என கண்டறிந்துள்ளது. தெலங்கானா மாநிலம் பத்ராசலத்தில் அமைந்துள்ள ‘ஸ்ரீ ராமச்சந்திர சுவாமி கோயிலுக்கு’ இந்த 12 தங்க வாகனங்கள், ‘என்ஆர்ஐ வாசவி அசோசியேஷன்’ என்ற அமெரிக்க அமைப்பால் வழங்கப்பட்டது. இந்த வீடியோவை ஃபேஸ்புக்கில் பகிர்ந்த சிலர் , ​​’அயோத்தியின் ஸ்ரீ ராம்லாலாவுக்கு அமெரிக்காவிலிருந்து 11 வாகனங்களும், தூய தங்கத்தால் ஆன சிம்மாசனமும் பரிசாக வழங்கப்பட்டுள்ளன’ என்று ஒரு எழுதினர்.

உண்மை சரிபார்ப்பு : 

சமூக வலைதளங்களில் வைரலான வீடியோவை கூகுள் ரிவர்ஸ் இமேஜ் மூலம்  BOOM தேடியபோது வி6 நியூஸ் தெலுங்கின் யூடியூப் சேனலில் மார்ச் 21, 2023 தேதியிட்ட செய்தி அறிக்கையைக் கண்டோம் . இந்த வீடியோவின் தலைப்பு ‘பத்ராசலம் கோவிலுக்கு என்ஆர்ஐ வாசவி சங்கம் 12 தங்க வாகனங்களை வழங்கியது என குறிப்பிட்டிருந்தது.

இந்த செய்தியில் வைரலான வீடியோ காட்சிகளும் இடம்பெற்றுள்ளன. வைரல் வீடியோ மற்றும் செய்தி வீடியோவில் காட்டப்பட்டுள்ள இந்த சிம்மாசனக் காட்சிகளை ஒப்பிடப்பட்டுள்ளதை கீழ் காணும் படங்கள் மூலம் அறியமுடியும்.

இதிலிருந்து குறிப்பை எடுத்துக்கொண்டு, தெலுங்கு மொழியில் முக்கிய வார்த்தைகளை பயன்படுத்தில் Google இல்  தேடினோம். தெலுங்கில் சில செய்தி அறிக்கைகளையும் கண்டோம், அதில் இது தொடர்பான செய்திகளைக் காணலாம்.

மார்ச் 01, 2023 அன்று தெலுங்கு செய்தி சேனலான ABN ஆந்திரஜோதியின் இணையதளத்தில் வெளியிடப்பட்ட அறிக்கையில் , ‘பத்ராசலத்தில் உள்ள சீதா ராமச்சந்திர சுவாமி கோயிலில் புதிய தங்க சிம்மாசனத்தின் கும்பாபிஷேகம் வியாழக்கிழமை தொடங்கப்படும்’ என்று கூறப்பட்டுள்ளது.

மார்ச் 25, 2023 அன்று நியூஸ்18 தெலுங்கில் வெளியிடப்பட்ட செய்தியில் , பத்ராசலம் கோயிலில் இறைவனின் திருவீதி சேவைக்காக பயன்படுத்தப்பட்ட சிம்மாசனம் மாற்றப்படுவதாக கூறப்பட்டது. மூன்று நூற்றாண்டுகளாக சுவாமியின் திருவீதி சேவைக்கு பயன்படுத்தப்பட்டு வரும் இந்த சிம்மாசனங்கள் அடிக்கடி பழுது பார்க்கப்பட்டு வருகின்றன. இந்த சிம்மாசனங்கள் அமெரிக்காவின் வாசவி சங்கத்தின் உதவியால் மாற்றப்படுகின்றன என குறிப்பிடப்பட்டிருந்தது.

‘என்ஆர்ஐ வாசவி அசோசியேஷன்’ இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள தகவலின்படி , இது அமெரிக்காவை தளமாகக் கொண்ட ஒரு இலாப நோக்கற்ற, கலாச்சார மற்றும் சமூக அமைப்பாகும், இது பின்தங்கிய மக்களுக்கான கல்வி மற்றும் சுகாதாரம் தொடர்பான சேவைகளுக்காக செயல்படுகிறது. மேலும் இதுகுறித்து மேலும் தெளிவு பெறுவதற்காக BOOM NRI வாசவி சங்கத்தை தொடர்பு கொண்டது. அந்த அமைப்பைச் சார்ந்தவர்கள் கூறுகையில்

“இந்த சிம்மாசனங்கள் அயோத்தியில் உள்ள கோவிலுக்கு நன்கொடை அளிக்கப்படவில்லை, வைரலான கூற்று தவறானது. என்ஆர்ஐ வாசவி சங்கம் 2023 மார்ச்சில் தெலங்கானாவில் உள்ள பத்ராசலம் கோவிலில் ஸ்ரீராம் பரிவாருக்கு 12 தங்க வாகனங்களை வழங்கியது. பத்ராசலம் கோயில் என்றும் அழைக்கப்படும் சீதா ராமச்சந்திர சுவாமி கோயில் , ராமருக்கு அர்ப்பணிக்கப்பட்ட புகழ்பெற்ற கோயிலாகும்.தெலங்கானா மாநிலம் பத்ராத்ரி கொத்தகுடம் மாவட்டத்தில் கோதாவரி ஆற்றின் இடது கரையில் இந்த கோவில் கட்டப்பட்டுள்ளது.” என தெரிவித்தார்.

முடிவு :

அயோத்தியில் உள்ள ராமர் கோவிலுக்கு அமெரிக்க அமைப்பு ஒன்று  11 தங்க வாகனங்கள் மற்றும் சிம்மாசனங்களை பரிசாக அளித்துள்ளதாக சமூக வலைதளங்களில் படங்கள், வீடியோக்கள் வைரலாகின. இது தொடர்பாக பூம் நடத்திய ஆய்வில் அவை தெலங்கானா மாநிலம் பத்ராசலம் கோயிலுக்கு அர்பணிக்கப்பட்டது தெரியவந்தது.

Note : This story was originally published by ‘Boom and Translated by ‘News7 Tamil’ as part of the Shakti Collective.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.