ரூ.500 கோடி முதலீடு செய்ய வெளிநாடு சென்றாரா அண்ணாமலை? – அமைச்சர் பதில்

பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, வெளிநாட்டிற்கு 500 கோடி ரூபாய் முதலீடு செய்ய சென்றிருப்பதாக வரும் செய்திகளை அவர் தான் தெளிவு படுத்த வேண்டும் என அமைச்சர் மனோ தங்கராஜ் நியூஸ் 7 தமிழுக்கு…

பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, வெளிநாட்டிற்கு 500 கோடி ரூபாய் முதலீடு செய்ய சென்றிருப்பதாக வரும் செய்திகளை அவர் தான் தெளிவு படுத்த வேண்டும் என அமைச்சர் மனோ தங்கராஜ் நியூஸ் 7 தமிழுக்கு பேட்டியளித்துள்ளார்.

 

தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சர் மனோதங்கராஜ் நியூஸ் 7 தமிழுக்கு பிரத்யேக பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், தமிழ்நாட்டில் வேதனையில் இருப்பது மக்கள் இல்லை என்றும் எடப்பாடி பழனிசாமிதான் என்றும் கூறினார். அதிமுக-வை கண்காணிக்க ஆலோசனை வழங்க பாஜகவிற்கு உரிமை உள்ளது என்று அவரது கட்சியினரே தெரிவிப்பதாக கூறினார்.

 

எடப்பாடி பழனிசாமி கட்டுப்பாட்டில் தற்போது அதிமுக இல்லை. அவருக்கு உள்கட்சியிலும் முட்கள் இருக்கிறது. வெளியிலும் முட்கள் இருப்பதால் டெல்லிக்கு பயந்து நடுங்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. இதனால் அவர்தான் வேதனையில் உள்ளார். மனு என்று பேசுகின்றவர்கள் மனு என்றால் என்ன என்பதை தெளிவாக கூற வேண்டும் என அவர் கூறினார்.

முன்னர் வர்க்க அரசியல், பாசிசம் பேசுபவர்களின் கை கூலியாக தான் இவர்கள் உள்ளார்கள் என்ற அவர் தான் யாரையும் குறிப்பிட்டு கூற வில்லை என்றார். பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வெளிநாட்டிற்கு 500 கோடி ரூபாய் முதலீடு செய்ய சென்றுள்ளதாக செய்திகள் பரவிவருவதற்கு பதிலளித்த அமைச்சர் மனோ தங்கராஜ், இந்த கேள்வியை அண்ணாமலைதான் தெளிவு படுத்த வேண்டும் என தெரிவித்தார்.

 

-இரா.நம்பிராஜன்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.