This News Fact Checked by ‘PTI’
இந்தியாவில் உள்ள சுங்கச்சாவடியை முஸ்லீம் ஆண்கள் குழு ஒன்று சேதப்படுத்துவதைக் காட்டும் வீடியோவை பல சமூக ஊடக பயனர்களால் பகிரப்படுகிறது. PTI உண்மைச் சரிபார்ப்பின்படி இந்த வீடியோ செப்டம்பர் 2024ல் வங்காளதேசத்தில் நடந்த ஒரு சம்பவத்தின் வீடியோ என கண்டறியப்பட்டுள்ளது. இந்த வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு, இது இந்தியாவில் நடந்ததாக தவறாக பகிரப்படுகிறது
வைரலான பதிவின் கூற்று :
ஒரு X பயனர் ஜனவரி 21 அன்று ஒரு வீடியோவைப் பகிர்ந்துள்ளார். பிக்கப் வேனில் இருந்த ஒரு முஸ்லிம் ஆண்கள் குழு டோல் பிளாசா அதிகாரிகளுடன் கைகலப்பில் ஈடுபடுவதையும் பின்னர் அங்குள்ள பொருட்களை அடித்து நாசமாக்குவதையும் வீடியோ காட்டுகிறது.
“முஸ்லிம்கள் இன்று டோல் அடித்து உடைத்து திறந்து செல்கிறார்கள். நாளை உங்கள் வீட்டின் கேட் இப்படித்தான் திறக்கப்படும். இந்தியா கூட்டணி கட்சிகளுடன் சேர்த்து வளர்த்த காங்கிரஸே இந்த ஜிஹாதிகளையும் வழி நடத்துகிறது” என்ற தலைப்புடன் அந்த வீடியோவைப் பயனர் பகிர்ந்துள்ளார்.
உண்மை சரிபார்ப்பு :
InVid Tool Search மூலம் பிடிஐ டெஸ்க் இந்த வீடியோவை இயக்கியது மற்றும் சில கீஃப்ரேம்களைக் கண்டறிந்தது. கூகுள் லென்ஸ் மூலம் கீஃப்ரேம்களை வைத்து தேடியதில் இதே வீடியோவை பல பயனர்களும் இதே போன்ற கூற்றுடன் பகிர்ந்துள்ளதை டெஸ்க் கண்டறிந்தது. அத்தகைய இரண்டு இடுகைகளை இங்கேயும் இங்கேயும் காணலாம் , அவற்றின் காப்பக பதிப்புகளை இங்கே காணலாம் .
கூகுள் தேடல் முடிவுகள் இதே வீடியோவைக் கொண்ட செப்டம்பர் 2024 க்கு முந்தைய சில இடுகைகளை காட்டியது. அத்தகைய ஒரு இடுகைக்கான இணைப்பு மற்றும் காப்பக இணைப்பு இங்கே உள்ளது .
உண்மை சரிபார்ப்பின் அடுத்த பகுதியில், கூகுளில் முக்கிய வார்த்தைகளை தேடியபோது அது செப்டம்பர் 18, 2024 அன்று வெளியிடப்பட்ட டாக்கா ட்ரிப்யூனின் அறிக்கையை காட்டியது. அதன் தலைப்பில் “எக்ஸ்பிரஸ்வேயின் டோல் பிளாசாவை ஒரு கும்பல் நாசமாக்கியது.” என குறிப்பிட்டிருந்தது.
செய்தி அறிக்கையின்படி, டாக்கா உயர்மட்ட விரைவுச்சாலையில் உள்ள குரில் டோல் பிளாசாவில் இந்த சம்பவம் நிகழ்ந்தது, 30-40 பேரை ஏற்றிச் சென்ற பிக்கப் வேன் தடைசெய்யப்பட்ட வாகனம் என்பதால் டோல் பிளாசா அதிகாரிகளால் நிறுத்தப்பட்ட பின்னர் வாக்குவாதம் ஏற்பட்டது. சண்டை மேலும் தீவிரமடைந்தது, ஒரு நபர் தடுப்பு கம்பத்தை உடைத்த நிலையில் மற்றொருவர் ஊழியர்களைத் தாக்கினார்.
கூகுள் தேடல் முடிவுகளை மேலும் ஸ்கேன் செய்ததில், டெஸ்க் மற்றொரு முக்கிய வார்த்தை தேடலை நடத்தியது மற்றும் 2024 ஆம் ஆண்டு செப்டம்பர் 19 அன்று உள்ளூர் பங்களாதேஷ் சேனலான சேனல் 24 ஆல் பதிவேற்றப்பட்ட YouTube வீடியோவைக் கண்டறிந்தது. அந்த வீடியோ பங்களாதேஷ் நெடுஞ்சாலை ஆணைய அதிகாரியின் அறிக்கையைக் காட்டியது. பாதுகாப்பு காரணங்களுக்காக அந்த வேன் தடைசெய்யப்பட்டதால், டோல் செலுத்திய போதிலும் ஆண்கள் குழுவிற்கு நுழைவு மறுக்கப்பட்டது.
வீடியோவிற்கான இணைப்பு கொடுக்கப்பட்டுள்ளது. அதன் ஸ்கிரீன்ஷாட் கீழே உள்ளது.

முடிவு : ஒரு முஸ்லிம் ஆண்கள் குழு டோல் பிளாசாவை அடித்து உடைக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு அது இந்தியாவில் நடைபெற்றதாக பகிரப்பட்டது. பிடிஐ நடத்திய ஆய்வில் டோல் பிளாசாவை நாசப்படுத்தும் வீடியோ வங்கதேசத்தைச் சேர்ந்தது, இந்தியா அல்ல என்று கண்டறியப்பட்டுள்ளது.

முடிவு : ஒரு முஸ்லிம் ஆண்கள் குழு டோல் பிளாசாவை அடித்து உடைக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு அது இந்தியாவில் நடைபெற்றதாக பகிரப்பட்டது. பிடிஐ நடத்திய ஆய்வில் டோல் பிளாசாவை நாசப்படுத்தும் வீடியோ வங்கதேசத்தைச் சேர்ந்தது, இந்தியா அல்ல என்று கண்டறியப்பட்டுள்ளது.
Note : This story was originally published by ‘PTI’ and Translated by ‘News7 Tamil’ as part of the Shakti Collective.









