தோனி பதவி விலகல் முடிவு: பயிற்சியாளர் பிளமிங் விளக்கம்

சிஎஸ்கே அணியின் கேப்டன் பதவியில் இருந்து டோனி விலகுவது குறித்த முடிவு, திடீரென எடுக்கப்படவில்லை என தலைமை பயிற்சியாளர் பிளமிங் தெரிவித்துள்ளார். 15-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் நேற்று தொடங்கியது. முதல் போட்டியில் ஜடேஜா…

சிஎஸ்கே அணியின் கேப்டன் பதவியில் இருந்து டோனி விலகுவது குறித்த முடிவு, திடீரென எடுக்கப்படவில்லை என தலைமை பயிற்சியாளர் பிளமிங் தெரிவித்துள்ளார்.

15-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் நேற்று தொடங்கியது. முதல் போட்டியில் ஜடேஜா தலைமையிலான சென்னை அணியும், ஷ்ரேயாஸ் அய்யர் தலைமையிலான கொல்கத்தா அணியும் மோதின.

இந்த போட்டியில் சென்னையை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி, கொல்கத்தா அணி வெற்றி பெற்றது. கேப்டன் பதவியில் இருந்து தோனி விலகிய பின், சென்னை சூப்பர் கிங்ஸ் மோதிய முதல் போட்டி இதுவாகும்.

இந்நிலையில், கேப்டன் பதவியை டோனி கைவிடுவது குறித்து, கடந்த ஆண்டு ஐபிஎல் சீசனின் போதே டோனி, தன்னிடம் பேசியதாக பிளமிங் தெரிவித்தார்.

அவர் கூறியதாவது, “சென்னை அணியின் கேப்டன் பதவியை தோனி கைவிடுவது குறித்த முடிவு திடீரென எடுக்கப்படவில்லை. கடந்த ஆண்டு ஐபிஎல் தொடரின் போதே இது தொடர்பாக நாங்கள் பேசிக் கொண்டிருந்தபோது, கேப்டன் பதவியை கைவிடுவது குறித்து தோனி தெரிவித்திருந்தார்” என்றார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.