தனுஷின் ‘ராயன்’ 3 நாட்களில் இத்தனை கோடி வசூலா?

ராயன் திரைப்படம் முதல் 3 நாட்களில் உலகளவில் ரூ.75.2 கோடியை வசூலித்துள்ளதாக தனுஷ் தரப்பிலிருந்து அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியாகியுள்ளது.  தனுஷ் நடித்து இயக்கியுள்ள ராயன் படம் கடந்த ஜூலை 26-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது.…

ராயன் திரைப்படம் முதல் 3 நாட்களில் உலகளவில் ரூ.75.2 கோடியை வசூலித்துள்ளதாக தனுஷ் தரப்பிலிருந்து அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியாகியுள்ளது. 

தனுஷ் நடித்து இயக்கியுள்ள ராயன் படம் கடந்த ஜூலை 26-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. சந்தீப் கிஷன், காளிதாஸ் ஜெயராம், செல்வராகவன், எஸ்.ஜே சூர்யா, துஷாரா விஜயன்,  அபர்ணா பாலமுரளி, பிரகாஷ் ராஜ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். சன் பிக்சர்ஸ் இப்படத்தை தயாரித்துள்ளது. ஏ.ஆர் ரஹ்மான் இசையமைத்துள்ளார்.

தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளில் வெளியான ராயன் படம் ரசிகர்களிடம் பாசிட்டிவான விமர்சனங்களைப் பெற்று வருகிறது. இயக்குநராகவும் நடிகராகவும் தனுஷிற்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன. குறிப்பாக தமிழ் மற்றும் தெலுங்கு ரசிகர்களிடம் படத்தின் ரிலீஸுக்கு முன்பிருந்தே பெரியளவில் எதிர்பார்ப்பு இருந்தது. முன்பதிவுகளில் மட்டும் ராயன் படம் 6 கோடிக்கும் மேலாக வசூல் செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இன்று நடிகர் தனுஷின் தனது 42-வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். அவரது பிறந்தநாளை முன்னிட்டு தனுஷ் ரசிகர்கள் கூட்டம் கூட்டமாக திரையரங்கிற்கு படை எடுத்து வருகிறார்கள்.

இந்த நிலையில், ராயன் திரைப்படம் முதல் 3 நாள்களில் உலகளவில் ரூ.75.2 கோடியை வசூலித்துள்ளதாக தனுஷ் தரப்பிலிருந்து அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்தப் படத்தை பிளாக்பஸ்டர் படமாக்கியதற்காக நடிகர் தனுஷ் ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார். ‘ஏ’ சான்றிதழுடன் திரைக்கு வந்து முதல் 3 நாளில் இத்தனை கோடிகளை வசூலித்த முதல் தமிழ்ப்படம் ராயன் தான்!

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.