நடிகர் தனுஷின் ’D50’ திரைப்படத்தின் படப்பிடிப்பு இறுதிகட்டத்தை எட்டியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நடிகர் தனுஷ், இயக்குநர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ் ‘கேப்டன் மில்லர்’ படத்தில் நடித்து முடித்துள்ளார். வரலாற்று பாணியில் உருவாகி வரும் இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். இந்த படம் இந்த ஆண்டு இறுதியில் டிசம்பர் 15-ம் தேதி வெளியாக உள்ளது.
இதனை தொடர்ந்து தற்போது தனுஷ் தனது 50வது படத்தை தானே இயக்குகிறார். இந்த படத்திற்கு ராயன் என்று பெயர் தேர்ந்தெடுக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளது. மேலும் இப்படத்தில் தனுஷுடன் விஷ்ணு விஷால், ஜெயராம் காளிதாஸ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதாகவும், மேலும் துஷாரா விஜயன் கதாநாயகியாக நடிக்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியானது.
வடசென்னையை மையமாக கொண்ட இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசை அமைக்க உள்ளார். இந்நிலையில் எஸ்.ஜே.சூர்யா மற்றும் காளிதாஸ் ஜெயராம் ஆகிய இருவரும் தனுஷின் சகோதரர்களாக நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. மேலும், தனுஷ் 50 படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் தன்னை நடிக்க, நடிகர் தனுஷ் அணுகியதாக நேர்காணல் ஒன்றில் பிரபல இசையமைப்பாளர் தேவா தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், இப்படத்தின்படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதாக தனுஷ் தெரிவித்துள்ளார். இந்தப் படத்தை நிறைவு செய்தவுடன் இந்த ஆண்டின் இறுதியிலேயே அடுத்ததாக இயக்குநர் சேகர் கம்முலா இயக்கத்தில் தமிழ், இந்தி, தெலுங்கில் உருவாகவுள்ள புதிய படத்தில் இணையவுள்ளார் தனுஷ்.







