இறுதிக்கட்டத்தில் ‘தனுஷ் 50’ படப்பிடிப்பு – விரைவில் பேக்-அப்..!

தனுஷ் 50 படத்தின் படப்பிடிப்பு பணிகள் விரைவாக நடைபெற்று வருவதால் இன்னும் 30 நாட்களுக்குள் படப்பிடிப்பு முழுமையாக நிறைவு பெறும் என தகவல் வெளியாகியுள்ளது. இயக்குநர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் ‘கேப்டன் மில்லர்’ படத்தில்…

தனுஷ் 50 படத்தின் படப்பிடிப்பு பணிகள் விரைவாக நடைபெற்று வருவதால் இன்னும் 30 நாட்களுக்குள் படப்பிடிப்பு முழுமையாக நிறைவு பெறும் என தகவல் வெளியாகியுள்ளது.

இயக்குநர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் ‘கேப்டன் மில்லர்’ படத்தில் நடித்து முடித்துள்ளார் நடிகர் தனுஷ். வரலாற்று பாணியில் உருவாகியுள்ள இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார். இத்திரைப்படம் டிசம்பர் 15-ம் தேதி வெளியாக உள்ளது.

இதனை தொடர்ந்து தனுஷ் தனது 50வது படத்தை தானே இயக்கி, நடித்து வருகிறார். இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளது. மேலும் இப்படத்தில் கதாநாயகியாக துஷாரா விஜயன் நடிப்பதாகவும், விஷ்ணு விஷால், ஜெயராம், காளிதாஸ், ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதாகவும் தகவல்கள் வெளியானது.

இதையும் படியுங்கள் : என் இதயம் மகிழ்ச்சியில் துடிக்கிறது..! – ரஜினிகாந்த் நெகிழ்ச்சி

வடசென்னையை மையமாகக் கொண்ட இந்த படத்திற்கான இறுதிக்கட்ட படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இந்நிலையில், படப்பிடிப்பு பணிகளை படக்குழு தீவிரப்படுத்தி உள்ளதால், இன்னும் முப்பது நாட்களில் படப்பிடிப்பு முழுமையாக நிறைவு பெறும் என எதிர்பார்ப்பதாக சினிமா வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.