முக்கியச் செய்திகள் உலகம் லைப் ஸ்டைல்

டி ஷர்டாக மாறும் பிளாஸ்டிக் பாட்டில்கள், வருமானம் ஈட்டும் நிறுவனம்!

உலகளவில் பிளாஸ்டிக் பொருட்களால் பெரும் அச்சுறுத்தல் உள்ளது. ஒவ்வொரு பிளாஸ்டிக் பொருட்களுக்கு ஏற்ப அவை மக்குவதற்கு 20 முதல் 500 ஆண்டுகள் ஆகும். இந்நிலையில் துபாயைச் சேர்ந்த தனியார் நிறுவனம் ஒன்று பிளாஸ்டிக் பொருட்களின் மூலம் டி ஷர்டுகளை தயாரித்து அசத்திவருகிறார்கள்.

உலகளவில் ஒவ்வொரு ஆண்டும் 380 டன் பிளாஸ்டிக் பொருட்கள் உற்பத்தி செய்யப்படுகிறது. அணு ஆயுதங்களின் நேரடி தாக்குதலைவிட நம் கண் முன்னே உள்ள பிளாஸ்டிக் பொருட்களால் விலங்குகள், மனிதர்களின் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும் ஸ்லோ பாய்சனாகும்.

பூமியில் மனிதர்களுடைய காலடித் தடங்கள் படாத இடங்களில் கூட நாம் தூக்கியெறியும் பிளாஸ்டிக் பொருட்கள் குப்பை மலையாகத் தேங்கி இருக்கிறது. கடந்த 15 ஆண்டுகளில் உற்பத்தி செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களால்தான் இன்று பூமியை மூச்சுவிட முடியாமல் தினறிகொண்டிருக்கிறது.

இந்நிலையில் துபாய் நாட்டைச் சேர்ந்த டிகிரேட் ‘DGrade’ நிறுவனம் நாம் பயன்படுத்தித் தூக்கியெறியும் பிளாஸ்டிக் வாட்டர் பாட்டில்களை கொண்டு புதிய டி ஷர்டுகளை தயாரித்துவருகிறது. இவர்கள் ஒரு முழு பிளாஸ்டிக் பாட்டிலை இயந்திரத்தில் கொடுத்து பொடி சிப்ஸ்களாக மாற்றிவிடுகிறார்கள். இவ்வாறு சிப்ஸ்களாக மாற்றப்பட்ட பிளாஸ்டிக் இந்தியா,பாகிஸ்தான் மற்றும் சீனா ஆகிய நாடுகளில் உள்ள நிறுவனங்களுக்கு வழங்குகிறார்கள்.

இந்த நாடுகளில் உள்ள நிறுவனங்கள் அதனை பாலியஸ்டர் ஃபைபர் நூல்களாக மாற்றி மீண்டும் டிகிரேட் நிறுவனத்துக்கு அனுப்புகிறது. டிகிரேட் நிறுவனம் பாலியஸ்டர் ஃபைபர் நூல்களை கொண்டு அழகான வண்ணங்களில் டி ஷர்டுகளை தயாரித்து விற்பனைக்கு அனுப்புகிறார்கள்.

டிகிரேட் நிறுவனர் எம்மா பார்பர்

கடந்த ஆண்டு துபாயில் நடைபெற்ற சர்வதேச டி ஷர்ட் கண்காட்சி டிகிரேட்டின் பிளாஸ்டிக் டி ஷர்ட் காட்சிப்படுத்தப்பட்டது. பாலியஸ்டர் ஃபைபர் நூல்களை கொண்டு இந்த டி ஷர்ட் உருவாக்கப்படுவதால் இந்த வகையான டி ஷர்ட்டை மீண்டும் மறுசுழற்சி செய்து வேறு பொருளாக மாற்றமுடியும்.
சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்கும் பிளாஸ்டிக் பொருட்களைக் கொண்டே சுற்றுச்சூழலுக்கு உகந்த வகையில் டி ஷர்ட் தயாரிப்பதே தங்களுடைய நிறுவனத்தின் குறிக்கோள் என்கிறார் டிகிரேட் நிறுவனர் எம்மா பார்பர் கூறியுள்ளார்.

எம்மா பார்பர் தொடக்கத்தில் பிளாஸ்டிக் பொருட்களை கொண்டு ஹேண்ட் பேக் தயாரிப்பில் ஈடுபட்டுள்ளார். பின்னர் பிளாஸ்டிக் பொருட்களில் உள்ள பாலியஸ்டர் ஃபைபரை நூலாக மாற்றி ஆடைகளாக மாற்றும் எண்ணம் தோன்றியதாக அவர் கூறியுள்ளார். டிகிரேட் நிறுவனத்தில் உட்புற சுவர்களுக்கு பதில் பிளாஸ்டிக் பாட்டில்களை சுவர்களை வைத்துள்ளனர் என்பது கூடுதல் தகவலாகும்.

டிகிரேட் நிறுவனம் தற்போது அரபு நாடுகளை மையப்படுத்தி இந்த பிளாஸ்டிக் டீ ஷர்டுகளை விற்பனைச் செய்துவருகிறது. தூக்கி வீசப்படும் பழைய பிளாஸ்டிக் பொருட்களைக் கொண்டு குறைந்த முதலீட்டில் நவீனத் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி வருமான ஈட்டி வரும் டிகிரேட் நிறுவனத்தின் புதிய முயற்சி வித்தியாசமாகவும் வியப்பளிப்பதாகவும் உள்ளது.

Advertisement:
SHARE

Related posts

சென்னைக்கு அருகில் சித்த மருத்துவ பல்கலைக்கழகம் – மா.சுப்பிரமணியன்

Saravana Kumar

அதிமுக ஆட்சியில் “சிஸ்டம்” சரியில்லை; அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்

Ezhilarasan

பதக்கம் பெற்ற படைவீரரின் பரிதாப நிலை!

Halley Karthik