ரோப் புல்லிங் மரியாதையுடன் பிரியாவிடை பெற்றார் டிஜிபி சைலேந்திர பாபு!!

தமிழ்நாட்டின் டிஜிபியாக பணியாற்றிய சைலேந்திர பாபுவின் பதவிக் காலம் நிறைவடைந்த நிலையில், காவல்துறை சார்பில் அவருக்கு ரோப் புல்லிங் மரியாதை செலுத்தப்பட்டு பிரியாவிடை நிகழ்ச்சி கொடுக்கப்பட்டது. கடந்த 2021ம் ஆண்டு சட்டம்-ஒழுங்கு டிஜிபியாக சைலேந்திர…

தமிழ்நாட்டின் டிஜிபியாக பணியாற்றிய சைலேந்திர பாபுவின் பதவிக் காலம் நிறைவடைந்த நிலையில், காவல்துறை சார்பில் அவருக்கு ரோப் புல்லிங் மரியாதை செலுத்தப்பட்டு பிரியாவிடை நிகழ்ச்சி கொடுக்கப்பட்டது.

கடந்த 2021ம் ஆண்டு சட்டம்-ஒழுங்கு டிஜிபியாக சைலேந்திர பாபுவை தமிழ்நாடு அரசு நியமித்தது. 2 ஆண்டுகள் டிஜிபியாக பணியாற்றிய சைலேந்திரபாபுவின் பதவிக்காலம் இன்றுடன் நிறைவடைந்தது. இதனிடையே நேற்று தமிழ்நாட்டின் புதிய டிஜிபியாக சென்னை பெருநகர காவல் ஆணையராக இருந்த சங்கர் ஜிவாலை தமிழ்நாடு அரசு நியமித்தது.

இந்நிலையில் இன்று கடற்கரை சாலையில் அமைந்துள்ள காவல்துறை தலைமை அலுவலகத்தில் தமிழ்நாட்டின் 32வது சட்டம்-ஒழுங்கு டிஜிபியாக சங்கர் ஜிவால் பதவியேற்றுக் கொண்டார்.

இதையும் படியுங்கள் : சிறுமி டானியாவுக்கு ரூ.2.10 லட்சம் மதிப்பில் வீடுமனை பட்டா – வழங்கினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..!

தனது பதவிக்காலம் முடிந்து டிஜிபி சைலேந்திர பாபு விடைபெறுவதை முன்னிட்டு அவருக்கு மரியாதையுடன் கூடிய பிரியாவிடை கொடுக்கப்பட்டது. சைலேந்திர பாபுவுக்கு ரோப் புல்லிங் மரியாதை செலுத்தப்பட்டது. டிஜிபி சங்கர் ஜிவால் உட்பட காவல்துறை உயரதிகாரிகள், மலர்களால் அலங்கரிக்கப்பட்ட காரில் சைலேந்திர பாபுவை அமரவைத்து, அந்த காரை வடம்பிடித்து இழுத்து வழியனுப்பி வைத்தனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.