மாங்காடு வெள்ளீஸ்வரர் கோயிலில் தேர் திருவிழா! – தேரை வடம் பிடித்து இழுத்த பக்தர்கள்!

மாங்காடு வெள்ளீஸ்வரர் கோயிலில் நடைபெற்ற திருத்தேர் திருவிழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர். காஞ்சிபுரம் மாவட்டத்தில் அருகே மாங்காட்டில் மிகவும் பிரசித்தி பெற்ற வெள்ளீஸ்வரர் திருக்கோயில் அமைந்துள்ளது.  இந்த…

மாங்காடு வெள்ளீஸ்வரர் கோயிலில் நடைபெற்ற திருத்தேர் திருவிழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் அருகே மாங்காட்டில் மிகவும் பிரசித்தி பெற்ற வெள்ளீஸ்வரர் திருக்கோயில் அமைந்துள்ளது.  இந்த கோயிலில் பிரம்மோற்சவ விழா கடந்த 13 ஆம் தேதி கொடி ஏற்றத்துடன் தொடங்கியது.  கொடி ஏற்றத்தை தொடர்ந்து ஒவ்வொரு நாளும் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு வெள்ளீஸ்வரர் அலங்காரத்துடன் பக்தர்களுக்கு காட்சியளித்து வந்தார்.

இந்த நிலையில் ஏழாம் நாளான நேற்று ( ஜூன் – 19ம் தேதி ) திருத்தேர் திருவிழா நடைபெற்றது. நேற்று காலை மாங்காட்டில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த திருத்தேரில்
வெள்ளிஸ்வரர் பக்தர்களுக்கு காட்சி அளித்தார். மேலும்.  பக்தர்கள் அந்த திருத்தேரின் வடம் பிடித்து இழுத்தனர். இந்த தேரானது குன்றத்தூர் – மாங்காடு சாலை
மற்றும் கோயிலின் முக்கிய நான்கு மாட வீதிகளின் வழியாக ஊர்வலமாக இழுத்து
செல்லப்பட்டது.

இதையும் படியுங்கள் : நீட் கருணை மதிப்பெண் ரத்து செய்யப்பட்ட விவகாரம்! குறைகிறது முதலிடம் பிடித்த 6 மாணவர்களின் மதிப்பெண்!

தேர் முக்கிய வீதிகளின் வழியாக சென்றபோது அங்கிருந்த திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.  வெள்ளீஸ்வரருக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு விநாயகர் முருகர் சண்டிகேஸ்வரர் அம்பாள் மற்றும் சோமாஸ்கந்தர் பஞ்சமூர்த்திகள் தேரில் அலங்கரிக்கப்பட்டு வீதி உலா வந்ததை ஏராளமான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.