யுஜிசி நெட் தேர்வு ரத்து | மத்திய கல்வி அமைச்சகம் அறிவிப்பு!

யுஜிசி நெட் ஜூன் 2024 தேர்வை ரத்து செய்வதாக மத்திய கல்வி அமைச்சகம் அறிவித்துள்ளது.  நாடு முழுவதும் அரசியல் கட்சிகள் நீட் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், யூஜிசி நெட் 2024  தேர்வை…

யுஜிசி நெட் ஜூன் 2024 தேர்வை ரத்து செய்வதாக மத்திய கல்வி அமைச்சகம் அறிவித்துள்ளது. 

நாடு முழுவதும் அரசியல் கட்சிகள் நீட் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், யூஜிசி நெட் 2024  தேர்வை ரத்து செய்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. நடைபெற்று முடிந்த யுஜிசி நெட் 2024 தேர்வில் முறைகேடு நடந்திருக்கலாம் என தேசிய சைபர் கிரைமில் இருந்து யூஜிசிக்கு கிடைத்த தகவல் அடிப்படையில் இந்த முடிவெடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

தேர்வு முறையின் வெளிப்படைத்தன்மை, புனிதத்தை உறுதி செய்யும் நோக்கில் தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. புதிய தேர்வு தேதி குறித்த அறிவிப்பு தனியாக வெளியிடப்படும் என்றும், இந்த முறைகேடுகள் குறித்த விசாரணை சிபிஐ வசம் ஒப்படைக்கப்படுவதாகவும் மத்திய கல்வி அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்தியப் பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் உதவிப் பேராசிரியர் மற்றும் இளநிலை ஆராய்ச்சி நிதியுதவி பெருவதற்கான தகுதியைத் தீர்மானிப்பதற்காக தேசிய தேர்வு முகமை சார்பில் யுஜிசி நெட் தேர்வு நடத்தப்படுகிறது. இந்த தேர்வு நாடு முழுவதும் இரண்டு ஷிப்ட்களாக நேற்று முன்தினம் நடைபெற்றது. கடந்த சில ஆண்டுகளாக கணினி வழியாக நடைபெற்ற நெட் தேர்வு இம்முறை ஓஎம்ஆர் சீட் முறையில் நடைபெற்றுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.