குஜராத் மாநிலம் சூரத் அருகே நடந்த கோர விபத்தில் 15 பேர் உயிரிழந்தனர்.
சூரத் அருகே கொசம்பா என்ற பகுதியில் தறிக்கெட்டு சென்ற லாரி ஒன்று கட்டுபாட்டை இழந்து சாலையோரம் உறங்கிக் கொண்டிருந்த தொழிலாளர்கள் மீது ஏறியது. இதில் ராஜஸ்தானை சேர்ந்த ஒரு குழந்தை, 7 பெண்கள் உட்பட 15 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
மேலும் 6 பேர் காயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்து குறித்து வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் விபத்தை ஏற்படுத்திவிட்ட தப்பி சென்ற லாரி ஒட்டுநரை தேடி வருகின்றனர்.







