பங்குனி மாத அமாவாசையை முன்னிட்டு ஆயிரக்கண்ககான பக்தர்கள் சதுரகிரியில் குவிந்த மலையேறி சாமி தரிசனம் செய்தனர்.
விருதுநகர் மாவட்டம், வத்திராயிருப்பு அருகே மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் அமைந்துள்ளது பிரசித்தி பெற்ற சதுரகிரி சுந்தரம் மகாலிங்கம் கோயில். இந்த கோவிலுக்கு மாதந்தோறும் பிரதோஷம், அமாவாசை, பௌர்ணமி நாட்கள் மட்டுமே இக்கோவிலுக்கு பக்தர்கள் செல்ல அனுமதி வழங்கப்படும்.
இக்கோவிலில் சித்தர்கள் வாழ்ந்து வருவதால் சித்தர்களின் சொர்க்க பூமி என அழைக்கப்படுகிறது. பங்குனி மாத பிரதோஷம் மற்றும் அமாவாசையை முன்னிட்டு சதுரகிரி கோயிலுக்கு கடந்த 19-ம் தேதி முதல் நாளை வரை பக்தர்கள் செல்ல அனுமதி வழங்கப்பட்டது. பங்குனி மாத அமாவாசை என்பதால் பல பகுதிகளிலிருந்து அதிகாலை 7 மணி முதலே பக்தர்கள் அனுமதிக்கப்ட்டு தற்போது மலையேறி சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
7 மணி முதல்12 மணி வரை மட்டுமே பக்தர்களுக்கு சதுரகிரி கோவிலுக்கு செல்ல அனுமதி என வனத்துறை சார்பில் அளிக்கப்பட்டுள்ளது. மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் அவ்வப்போது மழை பெய்து வருவதால் பக்தர்கள் சாமி தரிசனம் செய்து முடிந்தவுடன் அடிவாரியான பகுதிக்கு திரும்ப வருமாறு வனத்துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
—அனகா காளமேகன்