தைப்பூசத்தை முன்னிட்டு திருச்செந்தூரிக் குவியும் பக்தர்கள்!

தைப்பூசத்தை முன்னிட்டு திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஏராளமான பக்தர்கள் குவிந்த வண்ணம் உள்ளனர். முருகன் கோயில்களில் நாளை தைப்பூசம் கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. இதனை முன்னிட்டு, முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை…

தைப்பூசத்தை முன்னிட்டு திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஏராளமான பக்தர்கள் குவிந்த வண்ணம் உள்ளனர்.

முருகன் கோயில்களில் நாளை தைப்பூசம் கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. இதனை முன்னிட்டு, முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பக்தர்கள் குவிந்த வண்ணம் உள்ளனர். தைப்பூசத்தை முன்னிட்டு நாளை அதிகாலை 3 மணிக்கு கோயில் நடை திறக்கப்படுகிறது. இந்த நிலையில், பக்தர்களின் வசதிக்காக கழிப்பறை, குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள், கோவில் நிர்வாகம் மற்றும் மாவட்ட நிர்வாகம் சார்பில் செய்யப்பட்டுள்ளன. மேலும், பாதயாத்திரை, நடைபாதை வசதிகளை ஏற்படுத்தி தர வேண்டுமென பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்தாண்டு முதல் தைப்பூசத்திற்கு அரசு பொதுவிடுமுறை அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Leave a Reply