சென்னையில் லலிதா ஜூவல்லரி அலுவலகத்தில் 5 கிலோ தங்கம் கொள்ளையடிக்கப்பட்ட விவகாரத்தில் தனிப்படையினர் விசாரணையை முடுக்கியுள்ளனர்.
சென்னை தியாகராய நகரில் உள்ள லலிதா ஜூவல்லரி அலுவலகத்தில் நகையை மதிப்பிடும் போது, 5 கிலோ தங்க நகை காணாமல் போனது தெரியவந்துள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த கடை ஊழியர்கள், இது தொடர்பாக காவல்துறையிடம் புகாரளித்தனர். இதனையடுத்து லலிதா ஜூவல்லரி அலுவலகத்திற்கு, நேரில் சென்று போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது, கடந்த 7 ஆண்டுகளாக ஸ்டாக் பிரிவில் பணியாற்றி வந்த, ராஜஸ்தானை சேர்ந்த பிரவிண் குமார் சிங் என்பவர் நகைகளை கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து, தலைமறைவான பிரவீன் குமார் சிங்கை பிடிக்க போலீசார் ராஜஸ்தான் விரைந்துள்ளனர்.







