முக்கியச் செய்திகள் இந்தியா செய்திகள்

தேவேந்திர குல வேளாளர் குறித்த சட்டத்திருத்த மசோதா மக்களவையில் தாக்கல்!

ஏழு உட்பிரிவுகளைச் சேர்த்து தேவேந்திர குல வேளாளர் என அழைப்பதற்கான சட்டத்திருத்த மசோதாவை தமிழக அரசின் பரிந்துரையை ஏற்று, மக்களவையில் மத்திய அரசு தாக்கல் செய்துள்ளது.

ஆதிதிராவிடர் இனப்பிரிவுகளில் உள்ள குடும்பன், பண்ணாடி, கல்லாடி, கடையன், தேவேந்திர குலத்தான், பள்ளன், வாதிராயன் ஆகிய ஏழு பிரிவுகளையும் ஒன்றாக இணைத்து, தேவேந்திர குல வேளாளர் என்று பெயர் மாற்றம் செய்ய வேண்டும் என்று தேவேந்திர குல வேளாளர் அமைப்புகள் நீண்டகாலமாகக் கோரி வந்தன.

இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்திருந்த நிலையில், ஆய்வு செய்து அரசுக்கு அறிக்கை அளிக்க, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையின் கூடுதல் தலைமைச் செயலாளர் ஹன்ஸ்ராஜ் வர்மா தலைமையில், நிபுணர் குழு அமைக்கப்பட்டடு அறிக்கை அளிக்கப்பட்டது.

அதன் பேரில், தமிழக அரசு பட்டியலினத்தவர் பட்டியலில் இந்த மாற்றங்கள் தேவை என மத்திய அரசிடம் கோரிக்கை வைத்திருந்தது. இதையடுத்து, தமிழக அரசின் பரிந்துரையை ஏற்று, மத்திய சமூக நலத்துறை அமைச்சர் தாவர்சந்த் கெலாட், மக்களவையில் சட்டத்திருத்த மசோதாவை தாக்கல் செய்தார். இந்த மசோதா பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாம் கட்டத்தில், விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படும் என்று தெரிகிறது.

Advertisement:
SHARE

Related posts

மேம்பாலத்தின் தூண் இடிந்து விழுந்த சம்பவத்தில் 2 பேர் உயிரிழப்பு

Vandhana

பாராட்டிய மு.க.ஸ்டாலின்; கண் கலங்கிய துரைமுருகன்

Saravana Kumar

“சரத் பவார் நலமாக உள்ளார்”: மகாராஷ்டிரா சுகாதாரத்துறை அமைச்சர்!

Halley karthi

Leave a Reply