மத்திய அமைச்சர் அமித்ஷா பயண விவரம்

புதுச்சேரியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று பங்கேற்கும் நிகழ்ச்சிகள் குறித்த விவரங்களை தற்போது பார்க்கலாம்… மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, இன்று காலை சென்னையிலிருந்து 8.40 மணிக்கு தனி ஹெலிகாப்டர் மூலமாக புதுச்சேரி…

புதுச்சேரியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று பங்கேற்கும் நிகழ்ச்சிகள் குறித்த விவரங்களை தற்போது பார்க்கலாம்…

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, இன்று காலை சென்னையிலிருந்து 8.40 மணிக்கு தனி ஹெலிகாப்டர் மூலமாக புதுச்சேரி செல்கிறார். தொடர்ந்து புதுச்சேரி பிள்ளைச்சாவடியில் உள்ள புதுவை பல்கலைக்கழக கலாசார மையத்தில் நடைபெறும் அரவிந்தரின் 150-வது பிறந்த நாள் விழாவில் அமித்ஷா பங்கேற்கிறார்.

புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் 3 புதிய கட்டடங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார். புதுச்சேரி ஈஸ்வரன் கோவில் வீதி பாரதியார் நினைவு இல்லத்துக்கு செல்லும் மத்திய அமைச்சர் அமித்ஷா, பின்னர் அரவிந்தர் ஆசிரமத்துக்குச் சென்று அரவிந்தர், அன்னை சமாதிகளுக்கு அஞ்சலி செலுத்துகிறார்.

மதியம் 2 மணிக்கு புதுச்சேரி கம்பன் கலையரங்கத்தில் நடைபெறும் அரசு விழாவில் 70 கோடி ரூபாய் திட்ட மதிப்பீட்டில் பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டுகிறார்.

பின்னர் பாஜக தலைமை அலுவலகத்தில் அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், கட்சி நிர்வாகிகளுடன் கலந்துரையாடவுள்ளார். மாலை 5:30 மணியளவில் தனி ஹெலிகாப்டர் மூலம் சென்னை திரும்புகிறார். சென்னை வரும் அவர், மாலை 6:15 மணியளவில் எல்லை பாதுகாப்புப் படையின் தனி விமானத்தில் டெல்லி புறப்பட்டு செல்கிறார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.