முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

பிரதமர் மோடி தொடங்கி வைத்த திட்டங்கள் குறித்து காண்போம்!

சென்னையில், மெட்ரோ ரயில் சேவை, கல்லணை கால்வாய் விரிவாக்கம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார். இதுகுறித்து முழு விவரத்தை காண்போம்.

சென்னைக்கு இன்று வந்த பிரதமர் நரேந்திர மோடி சென்னை, ஜவஹர்லால் நேரு உள்விளையாட்டு அரங்கில் பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி வைத்தார். அந்நிகழ்ச்சியில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் பன்னீர் செல்வம், உள்பட அதிமுக மற்றும் பாஜகவினர் பலர் கலந்து கொண்டனர்.

திட்டங்கள் விவரம்:

சென்னை வண்ணாரப்பேட்டை-விம்கோ நகர் இடையே 3 ஆயிரத்து 770 கோடி ரூபாய் மதிப்பீட்டில் சுமார் 9 கிலோ மீட்டர் நீளமுள்ள மெட்ரோ ரயில் சேவையை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார். சென்னை கடற்கரை-அத்திபட்டு இடையே 293 கோடி ரூபாய் மதிப்பீட்டில் சுமார் 21 கிலோ மீட்டர் நீளமுள்ள 4-வது ரயில் பாதை இணைப்புத் திட்டம்.

விழுப்புரம்-கடலூர்-மயிலாடுதுறை-தஞ்சாவூர் மற்றும் மயிலாடுதுறை-திருவாரூர் இடையிலான ஒற்றை வழி ரயில் பாதை 423 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மின்வழித்தடமாக மாற்றப்பட்டுள்ள திட்டம் ஆகியவற்றை பிரதமர் தொடங்கி வைத்தார். ஆவடி ராணுவ தளவாட உற்பத்தி தொழிற்சாலையில் முற்றிலும் உள் நாட்டிலேயே வடிவமைக்கப்பட்ட அர்ஜூன் ரக பீரங்கியை நாட்டுக்கு அர்ப்பணித்தார்.

2,640 கோடி ரூபாய் செலவில் கல்லணை கால்வாய் விரிவாக்கம் மற்றும் நவீனப்படுத்துதல் திட்டம், சென்னை தையூரில் ஆயிரம் கோடி ரூபாய் செலவில் ஐ.ஐ.டி.க்காக டிஸ்கவரி வளாகம் அமைப்பதற்கும் பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல்நாட்டினார்.

Advertisement:
SHARE

Related posts

அரைஞாண் கயிறுக்காக சிறுவன் நீரில் மூழ்கடிப்பு!

Jayapriya

கோயில்கள் சார்பாக உணவுப் பொட்டலம் வழங்கும் திட்டத்துக்கு நிதி: அமைச்சர் உத்தரவு

Halley karthi

காற்றில் பறந்து சிக்ஸரை தடுத்து மாஸ் காட்டிய கே.எல்.ராகுல்!

Halley karthi

Leave a Reply