ஆசிரியர் தேர்வு தமிழகம்

தேவேந்திர குல வேளாளர் மசோதா நாடாளுமன்றத்தின் அடுத்த கூட்டத் தொடரில் நிறைவேற்றப்படும்! – பிரதமர் மோடி

தேவேந்திர குல வேளாளர் மசோதா அடுத்த கூட்டத் தொடரில் நாடாளுமன்றத்தில் நிறைவேறும் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

இன்று காலை, 10.30 மணிக்கு, தனி விமானம் மூலம் சென்னை விமான நிலையத்திற்கு வந்த பிரதமர் மோடியை, தலைமை செயலாளர் ராஜீவ் ரஞ்சன் வரவேற்றார். அங்கிருந்து, ஹெலிகாப்டர் மூலம் ஐஎன்எஸ் அடையாறு கடற்படை தளத்திற்கு புறப்பட்டுச் சென்ற பிரதமர், பின்னர் பாதுகாப்பு வாகனங்கள் புடைசூழ, நேரு விளையாட்டரங்கத்திற்கு சென்றடைந்தார். அவருக்கு, பா.ஜ.க., மற்றும் அ.தி.மு.க. சார்பில் கலை நிகழ்ச்சிகளுடன் வரவேற்பு அளிக்கப்பட்டது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

நேரு விளையாட்டு அரங்கத்திற்கு வந்த மோடிக்கு, சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியும், துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வமும், பிரதமருக்கு பொன்னாடை போர்த்தி, நினைவுப் பரிசு வழங்கினர். மேடையில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த, முன்னாள் முதலமைச்சர்கள் எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோர் உருவப் படங்களுக்கு பிரதமர் மோடி, மலர் தூவி மரியாதை செய்தார். பின்னர் நிகழ்ச்சியை தொடங்கி வைத்த பிரதமர், ஆவடி ராணுவ தளவாட தொழிற்சாலையில் தயாரிக்கப்பட்ட அர்ஜூன் ரக பீரங்கியை நாட்டுக்கு அர்ப்பணித்தார்.

விழாவில் பேசிய துணை முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம், தமிழகத்தில், அதிமுக அரசின் முயற்சிகளுக்கு பிரதமர் மோடி ஆதரவாக இருப்பதாக கூறினார். சிறந்த முதலீட்டுக் களமாக தமிழகம் மாறியுள்ளதாகவும், சிறந்த மாநிலத்துக்கான விருதை, தமிழகம் 3 முறை பெற்றுள்ளதாகவும், ஓ.பன்னீர்செல்வம் பெருமிதம் தெரிவித்தார்.

இதைத் தொடர்ந்து பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, தமிழகத்தின் திட்டங்களுக்கு மத்திய பட்ஜெட்டில் நிதி ஒதுக்கியதற்கு, நன்றி தெரிவித்தார். மேலும், பிரதமரின் நடவடிக்கைகளால், இந்தியாவில், கொரோனா கட்டுக்குள் வந்திருப்பதாகவும், நம் நாட்டில் தயாரிக்கப்படும் தடுப்பூசிகள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வது பெருமைக்குரியது என்றும் அவர் தெரிவித்தார்.

பின்னர், வண்ணாரப்பேட்டை முதல் விம்கோ நகர் வரையிலான விரிவாக்கப்பட்ட மெட்ரோ ரயில் சேவை, சென்னை கடற்கரை முதல் அத்திப்பட்டு வரையிலான, நான்காவது ரயில் வழித்தடம், விழுப்புரம் – தஞ்சாவூர் – திருவாரூர் வரையிலான மின்மயமாக்கப்பட்ட ஒருவழி ரயில் பாதை ஆகியவற்றை, பிரதமர் மோடி கொடியசைத்து தொடங்கி வைத்தார். கல்லணை கால்வாய் புதுப்பித்தல் மற்றும் நவீனப்படுத்துதல் திட்டத்திற்கும், சென்னை தையூரில் அமைய உள்ள ஐஐடி வளாகத்திற்கும், பிரதமர் அடிக்கல் நாட்டினார்.

அதனைத் தொடர்ந்து விழாவில், தமிழில் “வணக்கம் சென்னை…வணக்கம் தமிழ்நாடு…” என்று பேச்சைத் தொடங்கிய பிரதமர் மோடி, முதலீட்டுக்கு உகந்த மாநிலமாக தமிழகம் திகழ்வதாகவும், இன்று தொடங்கி வைக்கப்பட்ட திட்டங்கள், மாநிலத்தின் வளர்ச்சிக்கு உதவும் என்றும் குறிப்பிட்டார்.

உணவு உற்பத்தியில் தமிழகம் சாதனை படைத்து வருவதாக குறிப்பிட்ட மோடி, வரப்புயர நீர் உயரும் என்ற ஔவையாரின் பாடலை மேற்கோள்காட்டினார். மேலும், தேவேந்திர குல வேளாளர்களின் கோரிக்கையை மத்திய அரசு ஏற்றுக் கொண்டுள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்தார். தேவேந்திர குல வேளாளர் மசோதா, அடுத்த நாடாளுமன்ற கூட்டத்தொடரில் நிறைவேற்றப்படும், என்றும் அவர் தெரிவித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

மருத்துவ பணியாளர்கள் குடும்பத்துக்கு பணி வழங்கும் நடவடிக்கை தீவிரம்

G SaravanaKumar

5 நாட்களுக்கு மழை, ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை

பெண்கள் இலவச பேருந்து பயணம்; நடத்துனர்களுக்கு அறிவுரை

G SaravanaKumar

Leave a Reply