திருச்சி லால்குடி அருகே ஊர் திருவிழாவை முன்னிட்டு வீட்டு தோட்டத்தில் சாரய ஊறல்கள் இருப்பதாக கிடைத்த தகவலின்பேரில் விரைந்த திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுஜித் குமார் நேரில் சென்று 110 லிட்டர் ஊறல்களை அழித்தார்.
விழுப்புரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் கள்ளச்சாராயத்தால் பல
உயிரிழப்பு ஏற்பட்ட நிலையில், இதன் எதிரொலியாக தமிழகத்தின் பல்வேறு
மாவட்டங்களில் கள்ளச்சாராயம், சாரய ஊறல் போன்றவை கள்ள சந்தையில் விற்பனை நடைபெறுகிறதா? கரும்பு ஆலைகளில் இருந்து பெறப்படும் மெத்தனால் எரிபொருள் வெளியே செல்கிறதா? போன்ற பல்வேறு கோணங்களில் காவல் துறையினர் தீவிரமாக
கண்காணித்து வருகின்றனர்.
அந்த வகையில் திருச்சி லால்குடி காவல் நிலையம் எல்லைக்கு உட்பட்ட பெரியவர்சீலி
கிராமத்தில் ஊர் திருவிழா நடைபெற உள்ளது. இதை தொடர்ந்து அவ்வூரை சேர்ந்த அந்தோணி பீட்டர் என்பவர் தனது வீட்டின் மூங்கில் தோட்டத்தில் 110 லிட்டர் சாராய ஊறல் போட்டு இருப்பது தெரியவந்தது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இது குறித்து தகவல் அறிந்த திருவெறும்பூர் மதுவிலக்கு அமலாக்க பிரிவினர் உடனடியாக திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுஜித் குமாரிடம் தகவல் அளித்தனர். இதன் அடிப்படையில் எஸ்.பி சுஜித் குமார் தலைமையிலான போலீசார் நேரில் சென்று ஊறல் டிரம்களை அழித்தனர்.
-ம. ஶ்ரீ மரகதம்