சர்வதேச விருதுகளை திருப்பி கொடுத்த ஹீரோ!

உலகளவில் இன்றும் ஹாலிவுட் நடிகர் டாம் க்ருஸுக்கு பெரிய ரசிகர் பட்டாளமே உண்டு. நடிகர் மற்றும் தயாரிப்பாளரான டாம் க்ருஸ் உலகிலேயே அதிக சம்பளம் வாங்கும் நடிகர்களில் ஒருவர். இவர் சமீபத்தில் தனக்கு வழங்கப்பட்ட…

உலகளவில் இன்றும் ஹாலிவுட் நடிகர் டாம் க்ருஸுக்கு பெரிய ரசிகர் பட்டாளமே உண்டு. நடிகர் மற்றும் தயாரிப்பாளரான டாம் க்ருஸ் உலகிலேயே அதிக சம்பளம் வாங்கும் நடிகர்களில் ஒருவர். இவர் சமீபத்தில் தனக்கு வழங்கப்பட்ட 3 கோல்டன் குளோபஸ் சர்வதேச விருதுகளைத் திருப்பி கொடுத்துள்ளார்.

ஹாலிவுட் பாரின் பிரஸ் அஸோஸியேஷன் (HFPA) என்ற அமைப்பு கடந்த 19 வருடங்களாக தங்களுடைய அமைப்பில் நிறவெறியைக் கடைப்பிடித்துவருவதாகக் குற்றச்சாட்டு ஹாலிவுட் வட்டாரத்தில் எழுந்துள்ளது. இந்த அமைப்புதான் ஒவ்வொரு வருடமும் சிறந்த படத்துக்கான கோல்டன் குளோபஸ் விருதுகளை வழங்கிவருகிறது.

இந்நிலையில் இந்த அமைப்பில் உள்ள 90 பேரும் வெள்ளை நிறத்தவர்களே மேலும் கறுப்பினத்தவர் எவருக்கும் இதுவரை உறுப்பினராகும் வாய்ப்பு கொடுக்கப்பட்டதில்லை என்ற விமர்சனம் தற்போது எழுந்துள்ளது.

HFPA வை எதிர்த்து ஹாலிவுட் நட்சத்திரங்கள் சிலர் தங்களின் கண்டனங்களை வெளிப்படுத்தி வருகின்றனர் . இதனை தொடர்ந்து பிரபல நடிகர் டாம் க்ருஸும் இந்த கண்டன போரட்டத்தில் கலந்துகொண்டுள்ளார். இவர் நடித்த ‘jerry maguire’, ‘magnolia’ மற்றும் ‘born on the fourth of july’ ஆகிய படங்களில் சிறந்த நடிப்பிற்காக HFPA வழங்கிய 3 கோல்டன் குளோபஸ் விருதுகளைத் திருப்பி அனுப்பியுள்ளார்.

நிறவெறி சர்ச்சையை எதிர்த்து ஹாலிவுட் நட்சத்திரகங்கள் தங்களின் கண்டனங்களை வெளிப்படுத்தி வருகின்றனர். இதனைத் தொடர்ந்து ஹாலிவுட்டின் சிறந்த நடிகர் “டாம் க்ருஸ்” மிக சிறந்த அங்கீகாரமாகக் கருதப்படும் கோல்டன் குளோபஸ் விருதுகளைத் திருப்பி அனுப்பியிருப்பது மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.