தொடர்ந்து சரியும் இந்திய ரூபாய் மதிப்பு; காரணம் என்ன?

மும்பை பங்குச்சந்தையில் 5 வாரங்களில் உச்சபட்சமாக 1021 புள்ளிகள் குறைந்ததால், சந்தை மதிப்பில் ஐந்து லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு சரிவு ஏற்பட்டுள்ளது. இது குறித்த செய்தியை பார்க்கலாம். கடந்த ஒரு வாரத்தில் உலக…

மும்பை பங்குச்சந்தையில் 5 வாரங்களில் உச்சபட்சமாக 1021 புள்ளிகள் குறைந்ததால், சந்தை மதிப்பில் ஐந்து லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு சரிவு ஏற்பட்டுள்ளது. இது குறித்த செய்தியை பார்க்கலாம்.

கடந்த ஒரு வாரத்தில் உலக சந்தைகள் சரிவை சந்தித்தன. அதற்கு காரணமாக உலக நாடுகளின் ரிசர்வ் அல்லது மத்திய வங்கிகள் பொருளாதார சீர்திருத்த நடவடிக்கையாக கடனுக்கான வட்டி விகிதத்தை உயர்த்தின. இதனால் முதலீட்டாளர்களும், மக்களும் அச்சத்துக்கு ஆளாகினர். அமெரிக்க மத்திய வங்கியின் தொடர்ச்சியான வட்டி விகித உயர்வால் அமெரிக்க டாலர் மதிப்பு வலிமையடைந்தது.

டாலருக்கான தேவையும் மீண்டும் அதிகரித்தது. இந்திய ரூபாயும் கடுமையாக சரிவை சந்தித்து 81 ரூபாய் 3 காசுகளாக இருந்தது. வட்டி உயர்வும், இந்திய ரூபாய் மதிப்பு சரிவையும் கண்ட முதலீட்டாளர்கள் இந்திய பங்குச்சந்தையில் இருந்து அதிகளவில் வெளியேற தொடங்கினர். பங்குகள் விற்பனை அளவும் அதிகரித்தது. சந்தைகளை பற்றிய சில கணிப்புகளும் எதிர்மறையாகவே இருந்தன. அத்துடன் அமெரிக்காவின் 10 ஆண்டு பத்திர ஈவுத் தொகை மதிப்பும் அதிகரித்தது.

இதனால் பெரும்பாலான துறை பங்குகளும் சரிவை சந்தித்தன. உலக நாடுகளின் பங்கு சந்தைகளும் கடும் சரிவைச் சந்தித்தன. இந்திய பங்குச்சந்தையிலும் அது எதிரொலித்தது. வார வர்த்தக இறுதி நாளான வெள்ளிக்கிழமை வர்த்தக நேர முடிவில், மும்பை பங்குச்சந்தை குறியீட்டெண்ணான சென்செக்ஸ் ஆயிரத்து 21 புள்ளிகள் குறைந்து, 58 ஆயிரத்து 98 ஆகவும், தேசிய பங்குச்சந்தை குறியீட்டெண்ணான நிப்டி 302 புள்ளிகள் குறைந்து 17 ஆயிரத்து 327 ஆகவும் வர்த்தகமானது. இதனால் முதலீட்டாளர்களுக்கு கடும் இழப்பை சந்தித்தனர். வெள்ளிக்கிழமை ஒரு நாள் மட்டும் ஐந்து லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு சந்தை மதிப்பில் இழப்பு ஏற்பட்டுள்ளது. கடந்த ஐந்து வாரங்களில் பங்கு வர்த்தகத்தில் அதிக பட்ச சரிவாக இது பார்க்கப்படுகிறது

மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் குறியீட்டில் டாப் 30 நிறுவனங்கள் பட்டியலில்
சன் பார்மா, டாடா ஸ்டீல், ஐடிசி ஆகியவை மட்டுமே உயர்வுடன் இருந்தது. மற்ற 27 நிறுவனங்களும் அதிகப்படியான சரிவை பதிவு செய்துள்ளது.

தேசிய பங்குச்சந்தையின் நிஃப்டி குறியீட்டில் வங்கி, நிதியியல் சேவைகள், மீடியா, பொதுத்துறை வங்கிகள், தனியார் வங்கிகள், ரியல் எஸ்டேட் ஆகிய துறைகள் 2 சதவீதத்திற்கும் அதிகமான சரிவை பதிவு செய்துள்ளது.

கடந்த ஒரு வாரத்தில் ஏற்பட்ட தொடச்சியான பங்குச்சந்தை சரிவுகளால் ,ஒரு வாரத்தில் சுமார் 4 லட்சத்து 90 ஆயிரம் கோடி ரூபாய் வரை குறைந்து, சந்தை மூலதன மதிப்பு 276 லட்சம் கோடி ரூபாயாக குறைந்துள்ளது .அத்துடன் வியாழக்கிழமை ஒரே நாளில் மட்டும் இரண்டாயிரத்து 500 கோடி ரூபாய் அளவுக்கு பங்குகளை விற்று முதலீட்டாளர்கள் வெளியேறியுள்ளனர்

இப்போது பரவலாக மக்களிடம் பொருட்களின் மீதான நுகர்வு கலாச்சாரம் பெருகியுள்ளது. அதே போல் வங்கி,இன்சூரன்ஸ்,தங்கம் ,ரியல் எஸ்டேட் சொத்துக்கள் மீதான முதலீட்டை தாண்டி பங்கு வர்த்தகத்தில் ஈடுபடுவோர் அளவும் அதிகரித்து வருகிறது. இதனால் இத்துறையில் அரசு அமைப்புகளின் ஆலோசனைகளும், கட்டுப்பாடுகளின் தேவையும் அதிகமாகிறது

ரா.தங்கபாண்டியன், நியூஸ் 7 தமிழ்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.