தமிழ்நாட்டில் டெங்கு தடுப்பு நடவடிக்கைகளை தீவிரமாக கண்காணிக்க வேண்டும் என பொது சுகாதாரத் துறை இயக்குநர் அறிவுறுத்தியுள்ளார்.
கேரளாவில் கடந்த மாதம் தென்மேற்கு பருவமழை தொடங்கியதை அடுத்து, மாநிலம் முழுவதும் காய்ச்சல் பாதிப்பும் அதிகரித்தது. 1 லட்சத்திற்கும் மேற்பட்டோர் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட நிலையில், பலருக்கு டெங்கு காய்ச்சல் இருப்பதும், எலிக்காய்ச்சல் இருப்பதும் தெரியவந்தது. இதையடுத்து அங்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டன.
அண்டை மாநிலமான தமிழ்நாட்டிலும் தீவிர முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்நிலையில் டெங்கு தடுப்பு தொடர்பாக அனைத்து மாவட்ட சுகாதார அலுவலர்களுக்கும் பொது சுகாதாரத் துறை இயக்குநர் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். அதில் பள்ளி கல்லூரி வளாகங்களில் கொசு உற்பத்தியாகாமல் தடுத்து டெங்கு காய்ச்சல் பரவலைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.
இதையும் படியுங்கள் : செந்தில் பாலாஜியை அமைச்சரவையில் இருந்து நீக்கிய உத்தரவு நிறுத்திவைப்பு – ஆளுநர் எழுதிய கடிதத்தை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் வழக்கு!!
தமிழ்நாட்டில் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகளைத் தீவிரமாக கண்காணிக்க வேண்டும் என்றும் மாணவர்களுக்குக் காய்ச்சல் அறிகுறிகள் கண்டறியப்பட்டால் தொடக்கத்திலேயே மருத்துவரை அணுகி சிகிச்சை பெற வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.







