புதுக்கோட்டையில் சாலையோர வியாரிகளை பயனாளிகளாக தேர்வு செய்து ஓர் ஆண்டு ஆகியும் தள்ளுவண்டி வழங்காததால், சாலையோர வியாரிகள் சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
புதுக்கோட்டை நகராட்சி சார்பாக தமிழ்நாடு முதல்வர் கடந்த ஆண்டு புதுக்கோட்டை வந்தபோது கோட்டை நகரில் 141 சாலை வியாபாரிகளை பயனாளிகளாக தேர்வு செய்து தள்ளுவண்டி வழங்க டோக்கன் வழங்கப்பட்டது.
ஆனால் ஓர் ஆண்டு ஆகியும் தள்ளுவண்டி வழங்காததை கண்டித்தும் உடனடியாக பயனாளிகள் அனைவருக்கும் தள்ளுவண்டி வழங்க வேண்டியும் புதுக்கோட்டை நகர சாலையோர வியாபாரிகள் சங்கத்தின் சார்பாக நகராட்சி அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
அனகா காளமேகன்






