நீலகிரி மாவட்டம் உதகையில் ஓல்ட் ஊட்டி என்ற பகுதியில் மீண்டும் சிறுத்தையின் நடமாட்டம் அதிகரித்துள்ளதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.
நீலகிரி மாவட்டம் உதகையில் சமீபகாலமாக சிறுத்தை உள்ளிட்ட வன விலங்குகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளது.குறிப்பாக கடந்த ஆண்டு பருவ மழை பொய்த்து போனதன் காரணமாக இரைத் தேடி ஊருக்குள் வரும் வன விலங்குகள் குடியிருப்பு பகுதிகளுக்குள் வருவதும்,அங்குள்ள கால்நடைகள் மற்றும் மனிதர்களை தாக்குவதும் தொடர்கதையாக மாறி உள்ளது.
இந்நிலையில் நேற்று அதிகாலையில் வனப்பகுதியில் இருந்து வெளியேறிய சிறுத்தை ஒன்று உதகையிலுள்ள ஓல்ட் ஊட்டி என்ற பகுதிக்கு வந்துள்ளது.அப்பகுதியிலுள்ள ஒரு வீட்டின் கூண்டுக்குள் கட்டப்பட்டிருந்த வளர்ப்பு நாயை ஒன்று தாக்கி கொடுரமாக கொன்றுள்ளது. இது அப்பகுதி மக்களிடையே பெரும் அச்சத்தை உண்டாக்கியுள்ளது.
தகவல் அறிந்த வனத்துறையினர் சிறுத்தையை பிடிப்பதற்கான தீவிர முயற்சியில் இறங்கியுள்ளர். எனினும் சிறுத்தையை பிடிக்கும் வரையில் பொதுமக்கள் யாரும் காலை மற்றும் மாலை நேரங்களில் வீடுகளை விட்டு வெளியேற வேண்டாம்
என வனத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.
வேந்தன்







