டெல்லி ஜந்தர்மந்தரில் இந்து மக்கள் கட்சி சார்பில் அர்ஜுன் சம்பத் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்துக்களின் மனது புண்படும்படியும், சனாதன இந்து தர்மத்திற்கு எதிராக வெறுப்பு பிரச்சாரம் செய்து இந்து பெண்களை அவமதித்து தொடர்ந்து பேசி வரும் நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும் தேச விரோத பிரிவினைவாத இயக்கங்களை ஆதரித்து பேசி வரும் விடுதலை சிறுத்தைகள் கட்சி, நாம் தமிழர் கட்சி, உள்ளிட்ட அமைப்புகளை தடை செய்ய கோரியும் தடை செய்யப்பட்ட பிஎஃப்ஐ ஆதரித்து பேசி வரும் சீமான், திருமாவளவன் உள்ளிட்டவரை கைது செய்ய கோரியும் பி.எஃப்.ஐ அமைப்பை ஆதரிக்கும் இயக்கங்களான விடுதலை சிறுத்தை நாம் தமிழர் உள்ளிட்ட அமைப்புகளின் மீது தேசிய புலனாய்வு முகமை அமைப்பு விசாரணை நடத்தி வழக்கு பதிவு செய்ய கோரியும் போராட்டத்தில் கோரிக்கை முன்வைக்கப்பட்டது.
முன்னதாக, நாங்கள் இந்து மதத்திற்கு எதிரானவர்கள் இல்லை எனவும் இந்து மதத்தின் பெயரால் கூறப்படும் சனாதனத்திற்கு எதிரானவர்கள் என ஆ.ராசா பேசியிருந்தார்.








