முக்கியச் செய்திகள் இந்தியா

எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான கலந்தாய்வு தேதி அறிவிப்பு

எம்பிபிஎஸ், பிடிஎஸ் மற்றும் பிஎஸ்சி நர்சிங் படிப்புகளில் சேருவதற்கான கலந்தாய்வு அக்டோபர் 11-ம் தேதி முதல் நடைபெறும் என்று மத்திய அரசின் மருத்துவக் கலந்தாய்வு கமிட்டி அறிவித்துள்ளது.

நாடு முழுவதும் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் எம்பிபிஎஸ், பிடிஎஸ், பிஎஸ்சி நர்சிங் உள்ளிட்ட மருத்துவ படிப்புகளில் சேருவதற்கான நீட் தேர்வு முடிவுகள் கடந்த செப்டம்பர் 7-ல் வெளியானது. நீட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் மாணவர்கள் மாநில மருத்துவக் கல்லூரிகள் & மத்திய அரசின் மருத்துவக் கல்லூரிகளில் சேர விண்ணப்பித்து வருகின்றனர்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இந்நிலையில், நாடு முழுவதும் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் அகில இந்திய
ஒதுக்கீட்டு ( AIQ ) இடங்களுக்கான ஆன்லைன் கலந்தாய்வு வரும் 11-ம் தேதி
தொடங்கும் என்றும், 11 முதல் 20-ம் தேதி வரை முதற்கட்ட கலந்தாய்வு நடைபெறும்
என்றும் மத்திய அரசின் மருத்துவக் கலந்தாய்வு கமிட்டி அறிவித்துள்ளது.

அதேபோல் மத்திய அரசின் மருத்துவக் கல்வி நிறுவனங்கள், நிகர்நிலை
பல்கலைக்கழகங்களில் உள்ள இடங்களுக்கு வரும் 10-ம் தேதி முதல் 20-ம் தேதி வரை
முதற்கட்ட கலந்தாய்வு நடைபெறும் என்றும், மாநிலங்கள் அக்டோபர் 17 முதல் 28-ம்
தேதிக்குள் முதற்கட்ட கலந்தாய்வை நடத்தலாம் என்றும் மத்திய அரசின் மருத்துவக்
கலந்தாய்வு கமிட்டி அறிவித்துள்ளது.


AIQ, மத்திய அரசின் மருத்துவக் கல்லூரிகள், நிகர்நிலை பல்கலைக்கழகங்களில்
முதற்கட்ட கலந்தாய்வில் சேர்க்கை பெற்ற மாணவர்கள் அக்டோபர் 28-ம் தேதிக்குள்
அவரவருக்கு ஒதுக்கப்பட்ட இடங்களில் சேர வேண்டும் என்றும், மாநில ஒதுக்கீட்டு
இடங்களைப் பொறுத்தவரை, முதற்கட்ட கலந்தாய்வில் சேர்க்கை பெற்ற மாணவர்கள்
நவம்பர் 4-ம் தேதிக்குள் தங்களுக்கான இடங்களில் சேர வேண்டும் என்றும்
மருத்துவக் கலந்தாய்வு கமிட்டி அறிவித்துள்ளது. அதேபோல் 2-ம் கட்ட கலந்தாய்வு, Mop Up Round, Stray Vacancy ஆகியவற்றுக்கான விரிவான அட்டவணையையும் மத்திய அரசின் மருத்துவக் கலந்தாய்வு கமிட்டி வெளியிட்டுள்ளது.

முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான வகுப்புகள் நவம்பர் 15-ல் தொடங்கும் என்றும்
வகுப்புகள் தொடங்கப்பட்ட பின்னரும் காலியாக உள்ள இடங்களுக்கு தொடர்ந்து
கலந்தாய்வு நடத்தப்படும் என்றும், டிசம்பர் 20-ம் தேதி வரை மாணவர்கள்
தங்களுக்கான இடங்களில் சேர வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாகவும் மத்திய அரசின்
மருத்துவக் கலந்தாய்வு கமிட்டி அறிவித்துள்ளது.

மத்திய அரசு விரிவான கலந்தாய்வு அட்டவணையை வெளியிட்டுள்ள சூழலில்,
தமிழ்நாட்டில் உள்ள மருத்துவக் கல்வி இயக்குநரகமும் விரிவான கலந்தாய்வு
அட்டவணையை விரைவில் வெளியிட உள்ளது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

சட்டப்பேரவையில் இன்று மக்கள் நல்வாழ்வுத்துறை மானிய கோரிக்கை மீதான விவாதம்

G SaravanaKumar

வியாழக்கிழமைகளில் பூஸ்டர் டோஸ் முகாம்!

G SaravanaKumar

பெட்ரோல், டீசல் விலை உயர்வு: சுப்பிரமணியன் சாமி எதிர்ப்பு

Niruban Chakkaaravarthi