சமையல் எரிவாயு விலை உயர்வை கண்டித்து சென்னையில் ஆர்ப்பாட்டம்!

சமையல் எரிவாயு விலை உயர்வை கண்டித்து சென்னையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சென்னை கோடம்பாக்கம் ரயில் நிலையம் அருகே , மத்திய சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்…

சமையல் எரிவாயு விலை உயர்வை கண்டித்து சென்னையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

சென்னை கோடம்பாக்கம் ரயில் நிலையம் அருகே , மத்திய சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில், சமையல் எரிவாயு உருளை விலை உயர்வை வாபஸ் பெறவேண்டும்
என்றும், பாஜக அரசு எட்டு ஆண்டு காலத்தில் 800 ரூபாய் விலை உயர்த்தியுள்ளதாகவும் ,
கண்டனம் தெரிவித்து முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் செல்வா. மத்திய அரசு உடனடியாக சமையல் எரிவாயு விலை உயர்வை வாபஸ் பெற வேண்டும் எனவும், மத்திய பட்ஜெட்டில் அதானி குழுமத்துக்கு சலுகைகளை அளிக்கும் மத்திய அரசு, அப்பாவி மக்கள் உபயோகிக்கும் கேஸ் சிலிண்டர் விலையை உயர்த்துவது கண்டிக்கத்தக்கது என்றார்.

—-கு.பாலமுருகன்

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.