நாளை காலை சென்னை திரும்பும் ரயிலில் வருவோரைக் கவனிக்க மருத்துவ குழுவும், மருத்துவமனையும் தயார் நிலையில் உள்ளதாக மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ”ககன் தீப் சிங் பேடி” தெரிவித்துள்ளார்.
ஒடிசா ரயில் விபத்தில் படுகாயம் அடைந்த தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் சிகிச்சை
உதவிக்காகச் சென்னை வருபவர்களுக்கு, ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில்
சிறப்பு வார்டுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
அதனை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ககன் தீப் சிங் பேடி
ஆய்வு மேற்கொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “ ஒடிசாவில் ஏற்பட்ட ரயில் விபத்து காரணமாகத் தமிழ்நாட்டைச் சேர்ந்த பயணிகளில் யாரெல்லாம் உயிரிழந்துள்ளனர், யாருக்கெல்லாம் படுகாயங்கள் ஏற்பட்டுள்ளது என்பது குறித்து ஆய்வு செய்ய அமைச்சர்கள் மற்றும் 3 ஐஏஎஸ் அதிகாரிகள் விபத்து நடந்த பகுதிக்குச் சென்றுள்ளார்கள் என கூறினார்.
மேலும், ஒடிசா அரசு அதிகாரிகளும், தமிழ்நாட்டிலிருந்து சென்ற அரசு அதிகாரிகளும் எங்களுடன் எப்போதும் தொடர்பில் இருக்கிறார்கள். வரக்கூடிய தகவல்கள் அடிப்படையில் , நான் ரயில்வே கோட்ட மேலாளருடன் பேசியிருக்கிறேன். அங்கிருந்து விபத்தால் காயமடைந்த மற்றும் அந்த ரயிலில் பயணம் செய்த பயணிகளுக்காகச் சிறப்பு ரயில் ஏற்பாடு செய்யப்பட்டு அதன் மூலமாக நாளை அதிகாலை அல்லது காலை 9 மணி ஒட்டி சென்னை வர இருப்பதாக தெரிவித்தார்.
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் 6 மருத்துவக் குழுக்கள் தயார் நிலையில் உள்ளது. 200 படுக்கைகள் சிறு காயங்களுக்குச் சிகிச்சை அளிக்க ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் தயார் நிலையில் உள்ளது. இதைத் தவிர ஓமந்தூரார், ராயப்பேட்டை, கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிறப்பு படுக்கைகள் தயார் நிலையில் உள்ளது.
அத்துடன், பாதிக்கப்பட்டவர்களுக்கு இரத்தம் தேவைப்பட்டால் அதற்கான ஏற்பாடுகளும்
தயாராக உள்ளதாகவும், சிறப்பு ரயிலில் பயணிக்கும் பயணிகள் வரும் போது அவர்களுக்கும் ரயிலில், ரயில்வே துறை அதிகாரிகள் மற்றும் மருத்துவக் குழுக்களும் இருப்பார்கள். தற்போது இந்த ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் 100 மருத்துவர்கள் , 40 படுகைகள் ஐசியு பிரிவில் தயார் நிலையில் உள்ளது என மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ககன் தீப் சிங் பேடி தெரிவித்தார்.