டெல்லியில் கொரோனா தினசரி பாதிப்பு 100- க்கும் கீழாகக் குறைந்துள்ளது.
கொரோனா 2 வது அலை நாடு முழுவதும் கடும் பாதிப்பை ஏற்படுத்தியது. இதில் டெல்லி, மகாராஷ்ட்ரா உள்பட பல மாநிலங்கள் அதிகமான பாதிப்பை சந்தித்தன. ஏப்ரல் மாத இறுதியில் ஒருநாள் கொரோனா பாதிப்பு டெல்லியில், 28 ஆயிரத்தை தாண்டியது. இதன் காரணமாக, டெல்லி மருத்துவமனைகளில் படுக்கைகள் கொரோனா பாதித்தவர் களால் நிரம்பியது. தொற்றைக் கட்டுக்குள் கொண்டு வர, டெல்லி அரசு முழு ஊரடங்கை அமல்படுத்தியது.
ஊரடங்கு மற்றும் கடுமையான கட்டுப்பாடுகள் காரணமாக கொரோனா தொற்று பல்வேறு மாநிலங்களில் குறைந்து வருகிறது. இதனால் தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில், தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் டெல்லியில் தினசரி தொற்றுப் பாதிப்பு நூறுக்கும் குறைவாக பதிவாகியுள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் 89 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக டெல்லி சுகாதாரத்துறை தெரிவித் துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 173 பேர் கொரோனாவில் இருந்து மீண்டுள்ளனர். மேலும் 11 பேர் கொரோனா வுக்கு உயிரிழந்துள்ளனர். டெல்லி முழுவதும் தற்போது கொரோனாவுக்கு 1,996 பேர் மட்டுமே சிகிச்சை பெற்று வருவதாக டெல்லி சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.







