டெல்லியில் தற்போது அமலில் இருக்கும் முழு ஊரடங்கு மேலும் ஒரு வாரங்களுக்கு நீட்டிக்கப்படுவதாக அம்மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.
டெல்லியில் நேற்றைய தினத்தில் 6,430 பேர் புதிதாக கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை தொடர்ந்து குறைந்து வந்தாலும், கொரோனாவால் சனிக்கிழமை அன்று உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 337 ஆக உள்ளது. இந்நிலையில் ஏற்கனவே அமலில் இருந்த கொரோனா ஊரடங்கு மேலும் ஒரு வாரத்திற்கு நீட்டிக்கப்படுவதாக அம்மாநில முதல்வர் தெரிவித்துள்ளார்.
டெல்லியில் கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. இப்போது நான்காவது முறையாக முழு ஊரடங்கை நீட்டித்து டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் உத்தரவிட்டுள்ளார். இந்நிலையில் அடுத்த வாரம் 23ம் தேதி வரை இந்த ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக அவர் அறிவித்தார்.







