உலகின் மிகவும் மாசுபட்ட 10 நகரங்களின் பட்டியலில் இருந்து டெல்லி வெளியேறியதாக அந்த மாநில முதலமைச்சர் அர்விந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். இதற்காக டெல்லி மக்களுக்கு வாழ்த்துகளையும் அவர் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அர்விந்த் கெஜ்ரிவால் ட்விட்டரில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: மிக நீண்ட நாட்களுக்குப் பிறகு உலகின் மாசுபட்ட நகரங்களின் பட்டியலில் இருந்து டெல்லி வெளியேறியுள்ளது. டெல்லி மக்களின் முயற்சியால் இந்த மாற்றம் நிகழ்ந்துள்ளது. நீண்ட நாள் உழைப்புக்கு கிடைத்த வெற்றியாகும். இன்னும் நிறைய தூரம் செல்ல வேண்டியுள்ளது. உலகின் மிக தூய்மையான நகரமாக டெல்லி உருவாக வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் உலகின் மாசுபட்ட நகரங்களின் பட்டியலை அவர் வெளியிட்டுள்ளார். இந்தப் பட்டியலில் பாகிஸ்தானின் லாகூர் நகரம் முதலிடத்தை பிடித்துள்ளது. இரண்டாவது இடத்தில் மும்பை உள்ளது.
அண்மைச் செய்தி: 2023-24ம் ஆண்டுக்கான வேளாண் பட்ஜெட் – பொதுமக்களிடம் கருத்துக் கேட்பு
மூன்றாவது இடத்தில் ஆப்கானிஸ்தான் நாட்டின் காபுலும் நான்காவது இடத்தில் கயோசியுங் நகரமும் உள்ளது. ஐந்தாவது இடத்தில் கிர்கிஸ்தானின் பிஸ்கெக் நகரமும் ஆறாவது இடத்தில் அக்ரா நகரமும் உள்ளது. பத்தாவது இடத்தில் சிலி நாட்டின் சாண்டியாகோ நகரம் இடம்பிடித்துள்ளது.







