நாயகன் & தளபதி: இருபெரும் கிளாசிக் படங்களில் இடம் பெற்றுள்ள முக்கிய லொகேஷன்கள்!

இயக்குநர் மணிரத்னத்தின் நாயகன் மற்றும் தளபதி அகிய இருபெரும் படங்களில் இடம் பெற்றுள்ள இந்தியாவின் முக்கிய லொகேஷன்கள் குறித்த செய்திக்குறிப்பை இந்த பகுதியில் பார்ப்போம். இந்திய திரையுலகின் மிக முக்கிய இயக்குநரான மணிரத்னம், அவரின்…

இயக்குநர் மணிரத்னத்தின் நாயகன் மற்றும் தளபதி அகிய இருபெரும் படங்களில் இடம் பெற்றுள்ள இந்தியாவின் முக்கிய லொகேஷன்கள் குறித்த செய்திக்குறிப்பை இந்த பகுதியில் பார்ப்போம்.

இந்திய திரையுலகின் மிக முக்கிய இயக்குநரான மணிரத்னம், அவரின் படங்களை இந்தியாவிற்குள் எடுப்பதையே பெரிதும் விரும்புவார். அந்த வகையில் இயக்குநர் மணிரத்னத்தின் கரியரில் திருப்புமுனையாக அமைந்த இரண்டு படங்கள் கமல்ஹாசனின் நாயகன் மற்றும் நடிகர் ரஜினிகாந்த்தின் தளபதி.

அன்றைய காலகட்டத்தில் வணிகரீதியாகவும் விமர்சனரீதியாகவும் பெரும் வெற்றி பெற்ற இந்த இரு படங்களும் இன்று வரை தமிழ் சினிமாவின் கல்ட் கிளாசிக் படங்களாக கொண்டாடப்பட்டு வருகின்றன. ரஜினி- கமல் இருவரும் தமிழ் சினிமாவில் இன்றளவும் ஜாம்பவான்களாக இருக்க இப்படங்கள் காரணமாக விளங்குகின்றன.

நாயகன்

இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சரண்யா, ஜனகராஜ், நாசர் நடிப்பில் 1987-ம் ஆண்டு வெளியான திரைப்படம் நாயகன். முக்தா சீனிவாசன் தயாரிக்க, இசையமைப்பாளர் இளையராஜா இசையமைத்துள்ளார்.

60-வது ஆஸ்கர் விருது வழங்கும் விழாவில், சிறந்த வெளிநாட்டுத் திரைப்படம் என்ற பிரிவில் நாயகன் திரைப்படம் இந்தியாவிலிருந்து பரிந்துரைக்கப்பட்டது.  இது, மும்பையில் தாதாவாக விளங்கிய வரதராஜ முதலியாரின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது.

தளபதி

இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் ரஜினிகாந்த், மம்முட்டி, அரவிந்த் சாமி நடிப்பில் 1991-ம் ஆண்டு வெளியான திரைப்படம் தளபதி. இத்திரைப்படத்தை ஜி.வெங்கடேசன் தயாரிக்க, இளையராஜா இசையமைத்துள்ளார்.

இத் திரைப்படத்தில் வரும் கதாபாத்திரங்களான அர்ஜூனன் (அர்ஜீன் – அரவிந்த் சாமி), கர்ணன் (சூர்யா – ரஜினிகாந்த்), துரியோதனன் (தேவராஜ் – மம்முட்டி) ஆகியோர் மகாபாரதக் கதையில் உள்ள கதாபாத்திரங்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.