மதுரை காமராசர் பல்கலை கழகத்தின் மீது ஊழல் குற்றச்சாட்டுகள் உள்ளிட்ட பல்வேறு புகார்களை அங்கு பணியாற்றும் பேராசிரியர்கள் மற்றும் மாணக்கர்கள் கூறி வருகின்றனர். இதனை தடுப்பற்கு என்ன வழி என யோசித்த பல்கலை கழக நிர்வாகம், புது ஐடியாவை கையில் எடுத்துள்ளது. இனிமேல் பல்கலை கழகத்தின் அனுமதியின்றி பேராசிரியர்களும், மாணக்கர்களும் மீடியாக்களை சந்திக்க கூடாது என சர்குலர் அனுப்பபட்டுள்ளது. அப்படியே மீடியாவை சந்திக்க வேண்டும் என விண்ணப்பித்தாலும் என்ன பேசப் போகிறோம் என்பதை பல்கலைகழக நிர்வாகத்திற்கு முன்னரே தெரிவிக்க வேண்டும் என அந்த சர்க்குலரில் கூறப்பட்டுள்ளது.
பல்கலைகழகத்தின் இந்த முடிவிற்கு கல்வியாளர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் கடுமையான கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். எமர்ஜென்சி காலத்தில்தான் இதுபோன்ற சென்சார்ஷிப் நடைமுறையில் இருந்தன. அதன் பின்னர் தற்போது தமிழகத்தில் மதுரை காமராசர் பல்கலை கழகம் எமர்ஜென்சியை நினைவுப்படுத்துகிறது என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இவ்விவகாரத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் முக ஸ்டாலினும், உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடியும் தலையிட்டு உரிய தீர்வுக் காண வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
மதுரை காமராசர் பல்கலை கழக பதிவாளர் சிவக்குமார் வெளியிட்டுள்ள மீடியா சென்சார் அறிவிப்பை எதிர்த்து நீதிமன்றத்திற்கு சென்றார்கள். பேராசிரியர் மற்றும் மாணக்கர்களுக்கு விதிக்கப்பட்டுள்ள தடையை பல்கலைழக நிர்வாகம் திரும்ப பெற வேண்டிய கட்டாயம் ஏற்படும் என முன்னாள் உயர்நீதிமன்ற நீதிபதி ஹரி பரந்தாமன் கூறியுள்ளார்.மேலும், இந்த சர்க்குலர் கருத்துரிமைக்கு எதிரான ஒன்று எனவும் அவர் கூறுகிறார்
Advertisement: