டெல்லி: உயிரிழந்த பிறகும் பலரை உயிர் வாழ வைத்த 18 மாத குழந்தை

டெல்லி எய்ம்ஸ் மருத்தவமனையில் மூளை சாவினால் உயிரிழந்த மஹிரா என்ற 18 மாத குழந்தை உடல் உறுப்புகளை தானம் செய்து பலரின் உயிரை காப்பாற்றி உள்ளது.  ஹரியானா மாநிலம், மீவாட் மாவட்டத்திலுள்ள நூ எனும்…

டெல்லி எய்ம்ஸ் மருத்தவமனையில் மூளை சாவினால் உயிரிழந்த மஹிரா என்ற 18 மாத குழந்தை உடல் உறுப்புகளை தானம் செய்து பலரின் உயிரை காப்பாற்றி உள்ளது. 

ஹரியானா மாநிலம், மீவாட் மாவட்டத்திலுள்ள நூ எனும் பகுதியை சேர்ந்த மஹிரா என்ற 18 மாத குழந்தை பால்கனியில் விளையாடி கொண்டிருக்கும் போது கீழே தவறி விழுந்ததில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதையடுத்து அவர் கடந்த 6ம் தேதி டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

தலையில் பலத்த காயம் ஏற்பட்டதன் காரணமாக அவர் நினைவை இழந்து கடந்த 11ம் தேதி மூளைசாவு அடைந்ததாக மருத்துவர்கள் கூறினர். இதனால் மஹிராவின் உடல் உறுப்புகளை தானம் செய்வதாக அவரது பெற்றோர் தெரிவித்தனர்.

மஹிராவின் நுரையீரல் டெல்லி ஐஎல்பிஎஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 6 வயதுடைய குழந்தைக்கு பொருத்தப்பட்டது. இரண்டு சிறுநீரகங்களும் எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 17 வயதுள்ள ஒருவருக்கு பொருத்தப்பட்டது. கார்னியா மற்றும் இதயம் பத்திரமாக பாதுகாக்கப்பட்டுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

இதுகுறித்து எய்ம்ஸ் மருத்துவர் தீபக் குப்தா கூறுகையில், டெல்லி எய்ம்ஸ் மருத்துவனையில் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு 18 மாதமான ரிஷந்த் என்ற குழந்தையின் உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டது. உடல் உறுப்புகளை தானம் செய்வதன் முக்கியத்துவத்தை புரிந்து கொண்ட மஹிராவின் தந்தையும் தனது குழந்தையின் உடல் உறுப்புகளை தானம் செய்தார். அதனடிப்படையில் உடல் உறுப்புகள் தானம் செய்த 2வது குழந்தையாக மஹிரா உள்ளார்.

மேலும் குழந்தைகளை கவனிப்பதில் பெற்றோர்களுக்கு அதிக விழிப்புணர்வு வழங்க வேண்டும். இந்தியா உடல் உறுப்புகளை தானம் செய்வதில் உலகத்தில் கடைசி நாடாக திகழ்கிறது. இந்தியாவில் 0.4மில்லியன் உடல் உறுப்புகள் தானம் செய்யப்படுகிறது. அமெரிக்கா மற்றும் ஸ்பெயின் அதிக அளவில் உடல் உறுப்பு தானம் செய்யப்படுகிறது. மேலும், இந்தியாவில் பெரும்பாலும் மூளைசாவு அடைந்த பிறகே உடல் உறுப்பு தானம் செய்யப்படுவதாகவும், அமெரிக்காவில் கடந்த செப்டம்பர் மாதம் 1 மில்லியன் உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டுள்ளதாகவும் மருத்துவர் தீகப் குப்தா தெரிவித்தார்

 

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.